பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்ததாக 14 பேர் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2022
23:23

திருச்சுழி:விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பரளச்சியில் காதல் பிரச்னையில் காதலனின் தாயை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாக 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பரளச்சி அருகே கே.வாகைக்குளத்தைச் சேர்ந்த மீனாட்சி 43, மகன் சக்தி சிவா 24. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணை காதலித்துள்ளார். இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜன. 22ல் காதல் ஜோடி மாயமானது.நேற்று மாலை சக்தி சிவாவின் வீட்டிற்கு உறவினர்களுடன் வந்த பெண்ணின் தாய் தனது மகள் எங்கே எனக் கேட்டு பிரச்னை செய்துள்ளார்.

அப்போது சக்தி சிவாவின் தாயார் மீனாட்சியை இழுத்துச் சென்று ரோட்டில் உள்ள மின் கம்பத்தில் வைத்து தாக்கி உள்ளனர்.பரளச்சி போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக 19 வயது பெண்ணின் தாயார், உறவினர்கள் நாகவல்லி, செல்வி, துரைப்பாண்டி உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை முன் பெண்ணின் உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். டவுன் போலீசார் சமாதானம் செய்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X