ஆலந்துார் மண்டலத்தில் பரங்கிமலை மெட்ரோ ரயில்வே சாலை அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தை, நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.நுாற்றுக்கணக்கான இரு, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பிட்ட துாரம் உள்ள இச்சாலையின் இருபுறமும், வாகனங்கள் வரிசையாக 24 மணி நேரமும் நிறுத்தப்பட்டுள்ளன.இது போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது.வாகனங்களின் பின்புறம், வழிப்போக்கர்கள் கழிப்பறையாக பயன்படுத்துவதால், அச்சாலை முழுதும் துர்நாற்றம்வீசுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.