கீழக்கரை : கீழக்கரை அருகே ஸ்ரீநகரில் சுயம்பு கனியின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. இதனால் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்ணுக்கு நகர் பா.ஜ., சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். அ.தி.மு.க., நகர் துணைச்செயலாளர் குமரன், கீழக்கரை நகர் பா.ஜ., அமைப்பாளர் ரகு, இணை அமைப்பாளர் வசந்தகுமார், நகர் தலைவர் மாடமுருகன், மாநில செயற்குழு பட்டியல் அணி நிர்வாகி வாசசேகர், ரூபன் உட்பட பலர் பங்கேற்றனர்.