தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, பீர்க்கன்காரணை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சில தினங்களாக திடக்கழிவு மேலாண்மை பணிகள் சரிவர நடைபெறுவதில்லை.கட்டபொம்மன் தெரு, தேவநேசன் நகர் குறுக்கு தெரு உட்பட உட்புற சாலைகளில், பெயரளவிற்கே குப்பை அகற்றப்படுவதால், ஆங்காங்கே கால்வாய்களில் குப்பை தேங்கி கிடக்கிறது.இந்த பகுதிகளில், பாதாள சாக்கடை திட்ட வசதியின்றி, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் கால்வாய்களில் தான் செல்கிறது.அந்த கால்வாய்களிலும், குப்பை தேங்கி கிடப்பதால், கழிவுநீர் வெளியேற முடியாமல், கொசுக்கள் உருவாகி சுற்றியுள்ள பகுதிகளில், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.மாநகராட்சியின் சுகாதார பிரிவு அதிகாரிகள், இதற்கு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.