வேளச்சேரி, முடிச்சூர் பகுதிகளில் நடந்த குடியரசு தின விழாவில், துாய்மை பணியாளர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர். இதன் வாயிலாக, அவர்கள் கவுரவிக்கப்பட்டனர். வேளச்சேரி, டான்சி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், நேற்று நடந்த குடியரசு தின விழாவில், மாநகராட்சி துாய்மை பணியாளர் ஒருவர் தேசிய கொடியேற்றி வைத்தார். நலச்சங்கத்தினரின் நடவடிக்கையை, மாநகராட்சி அதிகாரிகள் பாராட்டினர். அதே போல், முடிச்சூரில் நடந்த குடியரசு தின விழாவில், அதே ஊராட்சியில் 20 ஆண்டுகளாக பணிபுரியும், பெண் துாய்மை பணியாளர், முருகம்மாள் தேசிய கொடியேற்றி வைத்தார். அவரை, அப்பகுதி மக்கள் கவுரவித்தனர். - நமது நிருபர் குழு -