பழநியில் குவிந்த எடப்பாடி பக்தர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
00:06

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி பக்தர்கள் காவடிகளுடன் குவிந்தனர்.
எடப்பாடியை சேர்ந்த பருவதராஜகுல சமுதாயத்தினர் 360 ஆண்டுகளுக்கும் மேலாக பழநி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் முதல் பஞ்சாமிர்தம் தயாரிக்கத் துவங்கினர். ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்காக 20 டன் பஞ்சாமிர்தம் தயாரித்தனர். நேற்று எடப்பாடியில் இருந்து பால், மலர், சர்க்கரை, இளநீர் காவடிகளுடன் சேலம், சென்னிமலை, தாராபுரம் வழியாக பழநிக்கு வந்தனர்.
மாலையில் மலைக்கோயிலில் 800 கிலோ மலர்களால் பூ கோலமிட்டு சாயரட்சை பூஜையில் தரிசனம் செய்தனர். சரவணபவ சக்கரத்தில் வேலுடன் ஓம் வரைந்து பூஜைகள் செய்தனர். ஐந்நுாறு பக்தர்கள் இரவில் மலைக்கோயிலில் தங்கி வழிபாடு செய்தனர். பழநி மலைக்கோயிலில் இரவில் தங்குவதற்கு பருவதராஜகுல சமுதாயத்தினர் மட்டும் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X