ஊட்டி:படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, ஊட்டியில் காந்தி சிலைக்கு மனு அளித்து, உண்ணாவிரதம் இருக்க முயன்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரியில் வசித்து வரும் படுகர் இன மக்கள், சுதந்திரத்திற்கு பின், 1951ம் ஆண்டு முதல் பழங்குடியினர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இவர்களை, பழங்குடியினர் பட்டியலில் மீண்டும் சேர்க்க கோரி, போராடி வருகின்றனர்.இந்நிலையில், நீலகிரி படுகர் தேச கட்சி சார்பில், தலைவர் மோகன் தலைமையில், நேற்று ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு கோரிக்கை மனு அளித்து, போராட்டம் நடத்தப்பட்டது.
பின், அனைவரும் சிலை முன் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். உண்ணாவிரதத்திற்கு அனுமதி இல்லாததால், 12 பேரை போலீசார் கைது செய்தனர்.