கடலுார் மாவட்டம், விருத்தாசலம் எஸ்.ஐ., பரந்தாமன் தலைமையிலான போலீசார், கடந்த 19ம் தேதி விருத்தாசலத்தில் ரோந்து சென்ற போது, பிரின்ஸ், 25, என்ற கஞ்சா வியாபாரியை கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அடுத்த இரு தினங்களில் ஜாமினில் வந்த பிரின்ஸ், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.மாரி படத்தில் போலீசாரை எதிர்த்து நடிகர் தனுஷ் பேசிய, 'போய் அந்த போலீஸ்காரன்கிட்ட சொல்லு, நான் இங்க தான் இருப்பேன்; இந்த ஏரியாவே அவன் கண்ட்ரோல்ல இருக்கலாம். 'ஆனால், மாரி எப்பவும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்' என்ற வசனத்திற்கு ஏற்ப, பிரின்ஸ் நடித்து தன் இன்ஸ்டாகிராம் ஐ.டி.,யில் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். இது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -