திண்டுக்கல்லில் குடியரசு தின கொண்டாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
01:19

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.திண்டுக்கல் தினமலர் அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. காலை 8:30 மணிக்கு தேசிய கொடியேற்றப்பட்டது.மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் விசாகன் கொடியேற்றினார். இதன் பின் போலீஸ், ஊர்க்காவல் படை, என்.சி.சி., அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். டி.ஐ.ஜி., ரூபேஷ்குமார் மினா, எஸ்.பி.,ஸ்ரீனிவாசன், டி.ஆர்.ஓ., லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், வன அலுவலர் பிரபு, பயிற்சி கலெக்டர் பிரியங்கா, மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன் பங்கேற்றனர். சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்கள், பலுான்களை பறக்க விட்டனர். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 68 பேர், பல்வேறு துறைகளை சார்ந்த 596 அலுவலர்கள், கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த முன்கள பணியாளர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

அதே போல், சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் அவர்களின் வீட்டிற்கே சென்று பொன்னாடை அணிவித்து கலெக்டர் மரியாதை செய்தார்.* திண்டுக்கல் மாநகராட்சியில் கமிஷனர் சிவசுப்பிரமணியன் கொடியேற்றினார். நகரமைப்பு அலுவலர் சேதுராஜன், நகர் நல அலுவலர் இந்திரா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.* ரயில்வே ஸ்டேஷனில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால் கொடியேற்றினர். ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார், எஸ்.ஐ.,க்கள் வெற்றிமாறன், பன்னீர்செல்வம் பங்கேற்றனர்.* மாவட்ட மின்வாரியம் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர்

வினோதன் கொடியறே்றினார். பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.* மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் துணை மேலாளர் பாலசுப்பிரமணியன் கொடியேற்றினார். டீசல் சிக்கனமாக பயன்படுத்திய 15 ஓட்டுநர்கள், வருவாய் அதிகம் ஈட்டிய 15 நடத்துநர்கள் உட்பட 32 பேருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.* மாவட்ட வன அலுவலகத்தில் வன அலுவலர் பிரபு கொடியேற்றினார். ரேஞ்சர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.* காந்தி கிராம பல்கலையில் துணை வேந்தர் ரங்கநாதன் கொடியேற்றி வைத்து, 75 கோடி சூரிய நமஸ்கார் திட்டத்தை துவக்கி வைத்தார். பதிவாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.* காந்திஜி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தில் தலைவர் புவனேஸ்வரி கொடியேற்றினார். செயலாளர் சித்ரா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். குடியரசு தின போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். ஏ.என்.எஸ்., உரிமையாளர் பிரதீப் குமார் பங்கேற்றார்.* எம்.வி.எம்., அரசு மகளிர் கல்லுாரியில் முதல்வர் லட்சுமி தலைமை வகித்தார். நிகழ்ச்சி அமைப்பாளர் மணிமாலா கொடியேற்றினார். துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.* திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தலைவர் பி.பி.சந்திரன் கொடியேற்றினார். தாளாளர் பரமசிவம், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த விழாவில் டோனர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். சங்க தலைவர் சண்முகம் வரவேற்றார். முன்னாள் ராணுவ வீரர் ராஜா குருசாமி கொடியேற்றினார். முன்னாள் ராணுவ வீரர்கள்மாணிக்கம், சின்னப்பன், பத்ராசலம், முத்து கிருஷ்ணன் கவுரவிக்கப்பட்டனர். செயலர் கலைச்செல்வன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.* நாராயண ஐயர் கூட்டுறவு சங்கத்தில் தலைவர் வெங்கடேசன் கொடியேற்றினார். செயலாளர் ஜெகநாதன், பொதுமக்கள் பங்கேற்றனர்.* புனித மரியன்னை மேல்நிலை பள்ளியில் தலைமையாசிரியர் ஜார்ஜ் தலைமையில் உதவி தலைமையாசிரியர் மரியலுாயிஸ் சேகர் கொடியேற்றினார்.* குமரன் திருநகர் அண்ணா நுாற்றாண்டு மாநகராட்சி தொடக்க பள்ளியில் மதர் தெரசா லயன்ஸ் சங்க உறுப்பினர் பாலசண்முகம் கொடியேற்றினார். தலைவர் செபஸ்தியார் தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். லயன்ஸ் மாவட்ட தலைவர் சாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.* நாகல் நகர் அனைத்து வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கத்தில் செயலாளர் டீத்துாள் கண்ணன் கொடியேற்றினார். தலைவர் நம்பிக்கைநாதன்,

பொருளாளர் ரவிக்குமார், நுகர்வோர் மைய தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றனர்.* சின்னாளபட்டி விஜய் மேலாண்மை கல்லுாரியில் அறங்காவலர் விஜய் அஜய் கண்ணன் கொடியேற்றினார். தலைவர் விஜயராகவன் தலைமை வகித்தார். இயக்குனர் சுவர்ணலதா முன்னிலை வகித்தார்.* தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் நாகராசன் தலைமை வகித்தார். மாநில இணை செயலாளர் சுப்பிரமணியம் கொடியேற்றினார். நுாற்றாண்டு கண்ட முன்னாள் ராணுவ வீரர் பழனிச்சாமி கவுரவிக்கப்பட்டார். பொருளாளர் ராஜேஷ்கண்ணன் நன்றி கூறினார்.* காந்திஜி நினைவு நடுநிலைப் பள்ளி, திண்டுக்கல் மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய விழாவில் தலைமையாசிரியர் பாலாஜி சுப்பிரமணி வரவேற்றார். ரோட்டரி சங்க தலைவர் ஜெயராஜ் கொடியேற்றினார். பள்ளி நிர்வாகி பத்மநாபன் முன்னிலை வகித்தார்.* பிள்ளையார்நத்தம் டாக்டர் ஜாகீர் உசேன் நினைவு சிறுபான்மையினர் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் ஊராட்சி தலைவர் உலகநாதன் கொடியேற்றினார். பள்ளி செயலர் ஹாஜி அப்துல் லத்தீப் முன்னிலை வகித்தார். பேகம்சாஹிபா நகரம் தொடக்க பள்ளியில் பள்ளப்பட்டி ஊராட்சி தலைவர் பரமன் கொடியேற்றினார்.

தலைமையாசிரியர் பாத்திமா மேரி வரவேற்றார். அசனாத்புரம் தொடக்க பள்ளியில் முன்னாள் வார்டு கவுன்சிலர் சின்னத்தம்பி கொடியேற்றினார். தலைமையாசிரியர் அம்பிகாதேவி முன்னிலை வகித்தார்.* பாண்டியன் நகர் காமராஜர் மெட்ரிக் பள்ளியில் செயலாளர் ராமலிங்கம் கொடியேற்றினார். இயக்குனர்கள் நரசிங்கசக்தி, அமுதா, ஜோதிலட்சுமி, பொருளாளர் முருகன், தலைமையாசிரியர் கார்த்திகா பாரதி, நிர்வாக அலுவலர் அகிலன் முன்னிலை வகித்தனர்.

பன்றிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஊராட்சி தலைவர் தேவி கொடியேற்றினார். தலைமையாசிரியர் ஜான் ஜேம்ஸ் முன்னிலை வகித்தார்.* சல்லையகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தலைமையாசிரியர் லில்லிபுஷ்பம் கொடியேற்றினார். உதவி ஆசிரியர் காந்திமதி முன்னிலை வகித்தார்.* பிள்ளையார்நத்தம் அம்மன் கலை அறிவியல் கல்லுாரியில் தாளாளர் உமாவதி கண்ணன் கொடியேற்றினார்.* பாலம்ராஜக்காபட்டி ரமணாஸ் ஏ.பி.சி., பாலிடெக்னிக் கல்லுாரியில் முதல்வர் மணிவண்ணன் கொடியேற்றினார்.

நிர்வாக அலுவலர் திருப்பதி முன்னிலை வகித்தார்.* தாமரைப்பாடி எஸ்.பி.எம்., பொறியியல் கல்லுாரியில் தாளாளர் ஜெயராஜ் கொடியேற்றினார். முதல்வர் விஜய்சக்கரவர்த்தி, பாலிடெக்னிக் முதல்வர் ஞானஜெயராமன் முன்னிலை வகித்தனர்.* திண்டுக்கல் சிவாஜி தலைமை மன்ற அறக்கட்டளையின் தலைவர் நடராஜன் கொடியேற்றினார்.* அச்யுதா குழுமப் பள்ளிகளில் நடந்த விழாவில் முதன்மை முதல்வர் சந்திரசேகரன் கொடியேற்றினார். செயலாளர் மங்களராம் தலைமை வகித்தார். காயத்திரி தலைமை வகித்தார்.

ஆசிரியர் உஷா ராணி குடியரசு தின விழா குறித்து பேசினார்.* சோஷியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் மாவட்ட செயலாளர் அபுதாஹிர் கொடியேற்றினர்.* தமிழக எல்லைக்காவலர் தியாகிகள் சங்கத்தில் எல்லை மீட்பு காவலர் ராமசாமிக்கு ஆத்துார் வட்டாச்சியர் நிர்மலா பொன்னாடை அணிவித்தார்.* காமராஜர் தேசிய பேரவை மாவட்ட காங்., துணைத் தலைவர் ராமசாமி கொடியேற்றினார். நகர தலைவர் வீரமணி தலைமை வகித்தார்.* சிவசெல்வி பால்பண்ணை கடைக்கு முன் பொதுமக்கள் முன்னிலையில் முன்னாள் ராணுவ வீரர் இருதயராஜ் கொடியேற்றினார்.

திண்டுக்கல் வர்த்தக சங்க தலைவர் சுந்தரராஜன் கொடியேற்றினார். சங்க முதுநிலைத் தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தார்.* ராம் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நடந்த விழாவில் செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மாநகராட்சி நகர் நல அலுவலர் இந்திரா கொடியேற்றினார். முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் பேசினார். பொருளாளர் ேஷக் முஜிபுர் ரஹ்மான் நன்றி கூறினார்.----வேடசந்தூர்* ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் சாவித்திரி கொடியேற்றினார். அ.தி.மு.க., ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, பிரபாகரன், மேலாளர் குமரன் பங்கேற்றனர்.* தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மணிமொழி கொடியேற்றினார்.

மண்டல துணை வட்டாட்சியர் ஆதிக்குமார், ஆர்.ஐ., முத்துநாயகி, வி.ஏ.ஓ., ராஜரத்தினம் பங்கேற்றனர்.* ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் சண்முகம் கொடியேற்றினார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் நடராஜன், ஆசிரியர்கள் நித்யானந்தம், பாண்டிச்செல்வி, லதா, ஜாக்குலின் மேரி பங்கேற்றனர்.* கூவக்காபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வசந்தாதேவி தலைமை வகித்து கொடியேற்றினார். ஊராட்சி தலைவர் சுகுமார் முன்னிலை வகித்தார்.* அழகாபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொம்முசாமி கொடியேற்றினார்.தலைமையாசிரியர் செல்வராஜ், உதவி தலைமையாசிரியர் ஜெயப்பிரியா, ஆசிரியர் செல்வி பங்கேற்றனர்.* பி.வி.எம்., மெட்ரிக் பள்ளியில் தாளாளர் சூடாமணி கொடியேற்றினார். தலைமையாசிரியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* தாடிக்கொம்பு குருமுகி வித்யாஸ்ரம் மேல்நிலைப்பள்ளியில் சேர்மன் செந்தில்குமார் கொடியேற்றினார். தாளாளர் திவ்யா, முதல்வர் சியாமளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.----வடமதுரை-* ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் தனலட்சுமி கொடியேற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, ஒன்றிய கமிஷனர் வசந்தா, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.* பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் அபிராமி, கலைமகள் துவக்க பள்ளியில் தாளாளர் ஆர்.கே.பெருமாள், மேல்நிலைப் பள்ளியில் பி.டி.ஏ., தலைவர் குப்பாச்சி, குரு மழலையர் துவக்கப் பள்ளியில் தாளாளர் பிரபாகரன், பாரதி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை விஜயா கொடியேற்றினர்.* போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தெய்வம் கொடியேற்றினார். எஸ்.ஐ.,க்கள் பிரபாகரன், சந்திரன் முன்னிலை வகித்தனர்.

தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஜான்பிரிட்டோ தலைமையில் பி.டி.ஏ., தலைவர் நரசிங்கன் கொடியேற்றினார்.-----அய்லுார்-* பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ரோகிணி கொடியேற்றினார். இளநிலை உதவியாளர் அல்லிமுத்து, எழுத்தர் மோகன் முன்னிலை வகித்தனர்.* ரஞ்சித் மழலையர் துவக்க பள்ளியில் முதல்வர் மனோரஞ்சித் தலைமையில் தாளாளர் முனியாண்டி கொடியேற்றினார்.* ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் திருமாறன் கொடியேற்றினார்.* தங்கம்மாபட்டி சக்திசாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் சாந்தி முன்னிலையில் தாளாளர் ஸ்ரீதரன் கொடியேற்றினார்.

எரியோடு-* பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ஆர்.சாந்தநாயகி, அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தங்கவேல் கொடியேற்றினர்.* போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சத்யபிரபா கொடியேற்றினார். எஸ்.ஐ.,க்கள் பழனிச்சாமி, ராஜகணேஷ் முன்னிலை வகித்தனர்.* கலைவாணி மழலையர் துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் ஆபிரகாம் முன்னிலையில் நிறுவனர் சாவித்திரி கொடியேற்றினார்.

புதுரோடு இ.என்.பி., மழலையர் துவக்கப்பள்ளியில் தாளாளர் இளங்கோவன் முன்னிலையில் முதல்வர் ராமச்சந்திர பிரபு கொடியேற்றினார்.----நத்தம்* நீதிமன்றத்தில் நீதிபதி கலையரசி ரீனா கொடியேற்றினார். நத்தம் வழக்கறிஞர் சங்க தலைவர் ேஷக் சிக்கந்தர் பாட்ஷா, செயலாளர் செந்தில்குமார் உட்பட வழக்கறிஞர் பங்கேற்றனர்.* ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் கொடியேற்றினார். ஆணையாளர்கள் முனியாண்டி, உதயகுமார், துணைத்தலைவர் முத்தையா முன்னிலை வகித்தனர். கவுன்சிலர், அலுவலர்கள் பங்கேற்றனர்.* தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சுகந்தி, பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சரவணகுமார் கொடியேற்றினர்.தலைமை எழுத்தர் பிரசாத், துப்புரவு ஆய்வாளர் சடகோபி பங்கேற்றனர்.* போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., சரவணன்,

தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர்கள் லட்சுமணன், வனத்துறை அலுவலகத்தில் வனச்சரகர் பாஸ்கரன் கொடியேற்றினர்.----சாணார்பட்டி* ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் கொடியேற்றினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராமதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமுத்து, அருள் கலாவதி முன்னிலை வகித்தனர்.* போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., சேகர் பால்ராஜ், வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊர் நாட்டாமை லோகநாதன் கொடியேற்றினர்.

ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.* கோபால்பட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்புராமன் கொடியேற்றினார்.----குஜிலியம்பாறை * ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மருதமுத்து கொடியேற்றினார். கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன் பங்கேற்றனர்.* தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சரவணவாசன், பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ராஜலட்சுமி கொடியேற்றினர்.* போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ., ராதாகிருஷ்ணன், அரசு மருத்துவமனையில் டாக்டர் சுரேஷ் கொடியேற்றினர்.* சி.சி., குவாரி செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் இணை தலைவர் கிருஷ்ணன் கொடியேற்றினார். துணைப் பொது மேலாளர் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* ஆலம்பாடி ஊராட்சி சத்திரப்பட்டி காந்தி சிலை மைதானத்தில் காங்., மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.எம்., ராமசாமி கொடியேற்றினார். உள்ளூர் பிரமுகர்கள் சோழராஜன், முருகேசன், வெள்ளைச்சாமி பங்கேற்றனர்.

சின்னாளபட்டி : அம்பாத்துறை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் கொடியேற்றினார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.* சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் நந்தகுமார் கொடியேற்றினார். காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.* சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்தாண்டு 12ம் வகுப்பில் சாதித்த மாணவி மிலானி கொடியேற்றினார்.

தாளாளர் சிவகுமார், முதல்வர் திலகம் முன்னிலை வகித்தனர்.---ஆத்தூர்* ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் மகேஸ்வரி, தீயணைப்பு நிலையத்தில் வீரர் கணேசன் கொடியேற்றினர்.* சித்தையன்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ஜெயமாலு கொடியேற்றினார்.* கன்னிவாடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் யுவராணி கொடியேற்றினார். சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரசு சமுதாய நல நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் செல்லமுத்து கொடியேற்றினார். டாக்டர் ஜெயந்தி, செவிலியர்கள் ஜெயலட்சுமி, செந்தில்ராணி பங்கேற்றனர்.---ரெட்டியார்சத்திரம்* ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் சிவகுருசாமி கொடியேற்றினார். கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.* சில்வார்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் தனலட்சுமி கொடியேற்றினார்.

துணைத்தலைவர் நதியா செந்தில் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் ராஜேந்திரன் வரவேற்றார். வார்டு உறுப்பினர்கள், துாய்மை காவலர்கள் பங்கேற்றனர்.* புதுச்சத்திரம் ஊராட்சியில் தலைவர் லெட்சுமி கொடியேற்றினார். துணைத் தலைவர் கிருஷ்ணவேணி காளியப்பன், ஊராட்சி செயலர் செந்தில்முருகன், பங்கேற்றனர்.

ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்துச்சாமி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் அய்யம்மாள் கொடியேற்றினர்.* தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் அண்ணாதுரை, ஒருங்கிணைந்த வர்த்தகர் சங்கம் சார்பில் தாராபுரம் ரவுண்டானாவில் நடந்த விழாவில் உறுப்பினர் ரகுமான் சேட் கொடியேற்றினர். தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். உறுப்பினர் பூரணச் சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.* காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் தாளாளர் ரங்கசாமி கொடியேற்றினார். செயலர் கலைவாணி, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாளாளர் திருப்பதி கொடியேற்றினார்.செயலர்கள் சுரேஷ், கண்ணன், மீனா, முதல்வர்கள் பங்கேற்றனர்.* அம்பிளிக்கை ஜேக்கப் நினைவு கிறிஸ்தவ கல்லுாரியில் வணிக மேலாண்மை துறை தலைவர், டாக்டர் கருப்புசாமி கொடியேற்றினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் டாக்டர் கதிரவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.* சின்னயகவுண்டன் வலசு அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் வாசுகி கொடியேற்றினார்.

துறை தலைவர்கள் கனகலட்சுமி, உமாமகேஸ்வரி, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.* காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம்., ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளியில் தாளாளர் ரத்தினம் கொடியேற்றினார். டிரஸ்டி சங்கீதா, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* வெரியப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமை கொடியேற்றினார்.* தொப்பக்காவலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் முத்துலட்சுமி தேசிய கொடியேற்றினார்.* சத்திரப்பட்டி ஊராட்சியில் ஒன்றிய துணைத்தலைவர் காயத்திரி கொடியேற்றினார். ஊராட்சித் தலைவர் சாரதா, துணைத் தலைவர் முருகானந்தம், மாவட்ட கவுன்சிலர் சங்கீதா பங்கேற்றனர்.----வத்தலக்குண்டு* ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் பரமேஸ்வரி கொடியேற்றினார். பி.டி.ஓ., க்கள் ஜெயச்சந்திரன், செல்வராஜ் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் முத்து வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர்கள் சூசைரெஜி, விஜயகர், சக்திவேல், பெனினாதேவி, செல்லம்மா பங்கேற்றனர்.* பேரூராட்சியில் தலைமை எழுத்தர் பாலகிருஷ்ணன் கொடியேற்றினார். சுகாதார ஆய்வாளர் சித்ராமேரி முன்னிலை வகித்தார். அலுவலக, துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர்.* மாவட்ட கல்வி அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பாண்டித்துரை கொடியேற்றினார். அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.*

அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இராமகிருஷ்ணன் கொடியேற்றினார். ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.* மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் எலிசபெத்பாத்திமா கொடியேற்றினார்.ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.----பழநி * டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., சத்யராஜ் கொடியேற்றினார்.* தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் கமலகண்ணன் கொடியேற்றினார்.* பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரியில் தமிழ்த்துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார்.----கொடைக்கானல்* நகராட்சியில் கமிஷனர் நாராயணன் கொடியேற்றினார்.

பொறியாளர் முத்துக்குமார், நகர செயலாளர் முகமது இப்ராஹிம், பணியாளர்கள் பங்கேற்றனர்.* தெரசா பல்கலையில் துணைவேந்தர் வைதேகி கொடியேற்றினார். பதிவாளர் ரமணி, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.* போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி., சீனிவாசன் கொடியேற்றினார். இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், போலீசார் பங்கேற்றனர்.* கூட்டுறவு பண்டக சாலையில் தலைவர் ஸ்ரீதர், அரசுப் போக்குவரத்துக் கிளையில் மேலாளர் ராதாகிருஷ்ணன் கொடியேற்றினர்.* கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., முருகேசன் கொடியேற்றினார். தாசில்தார் முத்துராமன், அலுவலர்கள் பங்கேற்றனர். பிரையன்ட் பூங்காவில் தோட்டக்கலை அலுவலர் சிவபாலன், ரோஜா பூங்காவில் தோட்டக்கலை அலுவலர் பார்த்தசாரதி கொடியேற்றினார்.* சூரிய ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி எபினேசர் கொடியேற்றினார். தலைமை விஞ்ஞானி செல்வேந்திரன் முன்னிலை வகித்தார். சுற்றுலா அலுவலகத்தில் உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன் கொடியேற்றினார்.* தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் உதவிப் பேராசிரியர் மணிவண்ணன், ஆனந்தகிரி 7வது தெருவில் சன் லைன்ஸ் பட்டய தலைவர் டி.பி. ரவீந்திரன் கொடியேற்றினார்.* தாண்டிக்குடி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் அன்னமயில், ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் மகேஷ், காமனுார் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் மணி ரஞ்சிதம் கொடியேற்றினர்.* குப்பம்மாள் பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் கோகிலா கொடியேற்றினார். ஊராட்சித் தலைவர் ஜீவா பங்கேற்றார். தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் தலைவர் பாலகும்பகன், பண்ணைக்காடு பேரூராட்சி செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின் கொடியேற்றினர்.

நிலக்கோட்டை* தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தனுஷ்கோடி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத் தலைவர் ரெஜினா நாயகம் கொடியேற்றினர். பி.டி.ஓ., குணவதி முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் நல்லதம்பி, அறிவு, தியாகு மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.* பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சுந்தரி கொடி ஏற்றினார். சுகாதார ஆய்வாளர் சரவணபாண்டியன் முன்னிலை வகித்தார். அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.* கணவாய்ப்பட்டி பர்ஸ்ட் ஸ்டெப் சி.பி.எஸ்.இ., பள்ளியில் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார். தாளாளர் கயல்விழி முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.* அரசு பெண்கள் கல்லூரியில் முதல்வர் டாக்டர் ராஜேந்திரன் கொடியேற்றினார். நிதியாளர் சுகந்தி முன்னிலை வகித்தார். கண்காணிப்பாளர் லட்சுமி வரவேற்றார். துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.----கொடைரோடு* அம்மையநாயக்கனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் சுகிர்தம்மாள், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் ஆர்தர் கொடியேற்றினர்.

ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.* பேரூராட்சியில் செயல் அலுவலர் ஜெயலட்சுமி கொடியேற்றினார். சுகாதார ஆய்வாளர் செந்தில் முன்னிலை வகித்தார்.* ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., பொன்னுச்சாமி, மன்னவராதி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் தனபால் கொடியேற்றினர்.* பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., அரசு மேல்நிலைப் பள்ளியில் நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் பிரசன்னா கொடியேற்றினார். மெட்ரிக் பள்ளி செயலாளர் கோபிநாத் முன்னிலை வகித்தார். ஆண்கள் பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். முதல்வர் ஆத்தியப்பன், தலைமையாசிரியர்கள் வசந்தா, பாக்கிய சரஸ்வதி, ஆண்கள் பள்ளி செயலாளர் நிர்மல், பெண்கள் பள்ளி செயலாளர் விஜயவேல், தொடக்கப் பள்ளி செயலாளர் சங்கரபாண்டி பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X