லாரி மோதி முதியவர் பலி
நகரி: சித்துார் மாவட்டம், பிச்சாட்டூர் அடுத்த, கீளப்பூடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேஷாய்யமந்தடி, 63. இவர், அதே கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் ஒரு பஸ்சில் இருந்து இறங்கினார். பின் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். பிச்சாட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம்பெண் தற்கொலை
நகரி: சித்துார் மாவட்டம், நின்ற கிராமம் அடுத்த, ஒரூர்பேட்டை காலனியைச் சேர்ந்தவர் அஜித் மனைவி நந்தினி, 23. இவர், இரு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் நந்தினி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். நின்ற கிராம போலீசார் விசாரிக்கின்றனர்.
ரயிலில் இருந்து விழுந்தவர் பலி
நகரி: சித்துார் மாவட்டம், புத்துார் அடுத்த, ராசபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கல்ராஜ் மகன் சங்கர்,45. இவர் எலும்பு முறிவு டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், திருப்பதியில் இருந்து ரயில் வாயிலாக புத்துார் நோக்கி வந்துக் கொண்டிருந்தார். அப்போது வடமால்பேட்டை அடுத்த, ஏ.எம்.புரம் அருகே ரயில் வந்த போது படியில் நின்றிருந்த சங்கர் தவறி விழுந்து இறந்தார். ரேணிகுண்டா ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
கூலித் தொழிலாளி தற்கொலை
நகரி: தமிழகம், கடலுார் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன், 34. இவர் கரும்பு வெட்டுவதற்கு ஆந்திர மாநிலம், விஜயபுரம் பகுதிக்கு வந்து அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையில், குடும்ப தகராறு காரணமாக, விஷம் குடித்து அவர் தற்கொலை செய்துக் கொண்டார். விஜயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.