ஆலந்துார்:பெயின்டரை வெட்டிய மூன்று சிறார்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆலந்துார், வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் செல்வா, 24; பெயின்டர். இவர் நேற்று முன்தினம் பணிமுடித்து, பொன்னியம்மன் கோவில் தெருவில் சென்றபோது, மூன்று சிறார்கள் எதிரே வந்தனர்.மூவரும், செல்வாவிடம் வீண் தகராறு செய்தனர்.
திடீரென அவரின் வலது கை, தலையில் பலமாக வெட்டி விட்டு தப்பியோடினர். பலத்த காயமடைந்த செல்வா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கத்தியால் வெட்டியது ஆலந்துார், ஆபிரகாம் நகரைச் சேர்ந்த, 17 வயது சிறார்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.