காஞ்சிபுரம்:மகிழ் கணித பயிற்சியில், சிறப்பிடம் பிடித்த ஒன்பது கணித ஆசிரியர்களுக்கு, பாராட்டு சான்று மற்றும் கேடயம் வழங்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த கல்வி இயக்கம் சார்பில், நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 'ஜியோ-ஜீப்ரா' என்ற மென்பொருள் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.அந்த கணித ஆசிரியர்கள் சமர்ப்பித்த அறிக்கை, 'எமிஸ்' இணைய தள தர மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
இதில், நடுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மூவர்; உயர், மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மூவர்; முதுகலை ஆசிரியர்கள் மூவர் என, மொத்தம் ஒன்பது கணித ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் கேடயங்களை, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.இந்த ஒன்பது ஆசிரியர்களும், காஞ்சிபுரம் மாவட்ட முதல்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் நடராஜன், பிரேமலதா ஆகியோரிடம், வாழ்த்து பெற்றனர்.