தேனி மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலாகலம்; 66 போலீசாருக்கு பதக்கம், 255 அலுவலர்களுக்கு பாராட்டு சான்று
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
02:17


தேனி : தேனி மாவட்டத்தில் நேற்று குடியரசு தினவிழா கோலாகலாமாக கொண்டாடப்பட்டது. 66 போலீசாருக்கு முதல்வர் பதக்கமும், 255 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றும் வழங்கப்பட்டது.73வது குடியரசு தினவிழாவையொட்டி தேனி தினமலர் நகரில் உள்ள தினமலர் அலுவலகத்தில் நேற்று காலை தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டன.

தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் முரளீதரன் தேசிய கொடியேற்றி போலீஸ், தீயணைப்பு, ஊர்க்காவல்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய 66 பேருக்கு முதல்வர் பதக்கத்தை கலெக்டர் வழங்கினார். சிறப்பாக பணியாற்றிய வருவாய், போலீஸ், தீயணைப்பு, ஊரக வளர்ச்சி துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 255 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்ரே, டி.ஆர்.ஓ.,

சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, பெரியகுளம் சப் -கலெ க்டர் ரிஷப், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., கவுசல்யா, தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவனைமுதல்வர் பாலாஜிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சின்னமனுார் நகராட்சியில் உள்ள காந்திஜி சிலைக்கு கலெக்டர் முரளீதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேனி கொடுவிலார்பட்டியில் வசித்து வரும் சுதந்திரபோராட்ட தியாகியின் வீட்டுக்கு சென்று வாரிசுதாரர் மாரிமுத்தம்மாளை கவுரவித்தார்.தேனி லட்சுமிபுரம்

ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விஜயா கொடி ஏற்றினார். மகிளா நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுந்தரம், சார்பு நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரி, மாரியப்பன், விரைவு நீதிமன்ற நீதிபதி ரூபனா, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா, கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ரமேஷ், அரசு தரப்பு வழக்கறிஞர் பாஸ்கரன் பங்கேற்றனர்.தேனி தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அலுவலர் கல்யாண குமார் கொடி ஏற்றினார்.

உதவி மாவட்ட அலுவலர் குமரேசன், நிலைய அலுவலர் பொன்னம்பலம் பங்கேற்றனர்.பள்ளி, கல்லுாரிகளில் விழா:தேனி நாடார் சரஸ்வதி துவக்கபள்ளியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் முருகன் தலைமையில் பொதுச்செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் முன்னிலையில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலாளர் பாண்டிக்குமார் வரவேற்றார். நிர்வாக்குழு உறுப்பினர் வன்னியராஜன் கொடி ஏற்றினார். உதவி ஆசிரியைகள் நாகலட்சுமி, இந்துமதி பேசினர். இல்லம்தேடி கல்வி திட்ட தன்னார்வலர் ஜெயஸ்ரீ மரக்கன்று நட்டார். தலைமையாசிரிரை காஞ்சனா தேவி பேசினார்.

உதவியாசிரியை சாந்தி நன்றி கூறினார்.தேனி வடபுதுப்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளியில் பள்ளி செயலாளர் கண்ணன், இணைச்செயலாளர் குணசேகரன் கொடியேற்றினர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சாம்பவி நன்றி கூறினார்.முத்துதேவன்பட்டியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செயலாளர் மகேஸ்வரன் கொடி ஏற்றினார். இணைச்செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், பாலசரவணக்குமார், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் பாஸ்கரன் பேசினார். பள்ளி முதல்வர் ஜெகநாதன் வரவேற்றார். நிர்வாகக்குழு உறுப்பினர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், அலுவலகபணியாளர்கள் கலந்து கொண்டனர்.தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரியில் முதல்வர் சித்ரா வரவேற்றார். உறவின்முறை தலைவர் முருகன், பொதுச்செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன், கல்லுாரி செயலாளர் காளிராஜ், இணைச்செயலாளர்கள் சுப்புராஜ், வன்னியராஜன் பேசினர். விடுதி செயலாளர் சேகர் கொடி ஏற்றினார். ஏற்பாடுகளை துணை முதல்வர்கள் கோமதி, சுசீலா செய்திருந்தனர். நுகர்வோர் சங்க அலுவலர் பாலசுப்புலட்சுமி நன்றி கூறினார்.

தேனி நாடார் சரஸ்வதி இன்ஜி., கல்லுாரியில் முதல்வர் மதளை சுந்தரம் வரவேற்றார். கல்லுாரி செயலாளர் காசிபிரபு கொடி ஏற்றினார். இணைச்செயலாளர் ராஜ்குமார் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை துணை முதல்வர் மாதவன், வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன், உடற்கல்வி இயக்குனர்கள் சுந்தர்ராஜன், செல்வகுமார், மாலினி செய்திருந்தனர்.தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரியில் செயலர் தாமோதரன் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. கம்மவார் சங்க துணை தலைவர் பொன்ராஜ் கொடி ஏற்றினார். சங்க பொதுச்செயலாளர் பொன்னுச்சாமி பேசினார்.

கல்லுாரி முதல்வர் சீனிவாசன், தலைவர் நம்பெருமாள் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ.,யில் குடியரசு தினவிழாவில் சங்க செயலாளர் பொன்னுச்சாமி கொடி ஏற்றினார். ஐ.டி.ஐ., செயலாளர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். முதல்வர் பிரகாசம் வரவேற்றார். பயிற்சி அலுவலர் சேகர் நன்றி கூறினார். ஆசிரியர்கள் நேசராஜா, அவினாஷ், கோவிந்தன் பங்கேற்றனர்.தேனி அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் கல்வி சங்க செயலர் பாக்யகுமாரி முன்னிலையில் முதல்வர் பரந்தாமன் தேசியகொடியேற்றினார். ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் கார்த்திகேயன் செய்திருந்தார். துணை முதல்வர் வினோத் குமார் நன்றி கூறினார்.தேனி கோடாங்கிபட்டி பூர்ண வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலை, சி.பி.எஸ்.இ.,, பள்ளி விழாவில் செயலாளர் கிருத்திகா வரவேற்றார். பள்ளி இயக்குனர் முரளிதரன் கொடி ஏற்றினார்.

பள்ளி தலைவர் முத்துகோவிந்தன் பேசினார். இயக்குனர்கள் ரேணுகாதேவி, ஷியாம், விவேதா, அரவிந்தன், ஹர்சவர்தன், குமார், சரண், தொழிலதிபர் தாமோதரன், ஆசிரியர்கள் பங்கேற்றனர். மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர்கள் ஜீவானந்தம், சுமதி நன்றி கூறினர். சீலையம்பட்டி இந்து நடுநிலைப்பள்ளி விழாவில் பள்ளி செயலர் சண்முகநாதன் கொடி ஏற்றினார். தலைமையாசிரியர் சோமசுந்தரபாண்டியன் வரவேற்றார். ஆசிரியை கனகாம்புஜம் நன்றி கூறினார். வெங்கடாசலபுரம் ஸ்ரீவரத வேங்கடரமண மேல்நிலைப்பள்ளியில் சபைத்தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் பள்ளி செயலர் நாராயணன் கொடி ஏற்றினார். சபை செயலாளர் அனந்தகுமார், பொருளாளர் சத்தியன் முன்னிலை வகித்தனர். காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பள்ளிக்குழு உறுப்பினர் சீனிவாசன், சபை செயற்குழு உறுப்பினர் அசோகன் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் தினகரன் வரவேற்றார். ஆசிரியர் சுந்தரராஜ் பேசினார். ஆசிரியர் சரவணன் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.கோட்டூர் அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் முதல்வர் சத்யா கொடியேற்றினார். தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தின விழா போட்டியில் வெற்றிபெற்று கலெக்டரிடம் பரிசு வாங்கிய தமிழ்த்துறை 2ம் ஆண்டு மாணவிகள் சுந்தரவதனா, இமய ஜனனி, ராமுத்தாய், லட்சுமி ஆகியோரை கல்லுாரி முதல்வர் பாராட்டினார்.தேனி ஐ.டி.ஐ.,யில் முதல்வர் சேகரன் கொடி ஏற்றினார். பயிற்சி அலுவலர்கள் செல்வராஜ், பயிற்சியாள பிரீத், காளீஸ்வரி பேசினர். விளையாட்டு அலுவலர் செல்வராஜா நன்றி கூறினார். ஏற்பாடுகளை அருண்குமார் செய்திருந்தார்.

தேனி நேரு சிலை அருகே நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் முனியாண்டி கொடியேற்றினார். மாவட்ட துணைத்தலைவர் கருப்பசாமி, மாவட்ட செயலாளர் அபுதாகிர் தஸ்லிம், தாஜூதீன், கோபிநாத் பங்கேற்றனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி தாலுகா குழு சார்பில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலை, அரண்மனைப்புதுாரில் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள நேரு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.தேனி நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் வீரமுத்துக்குமார் கொடி ஏற்றினார். நகராட்சி அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.தேனி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி கொடி ஏற்றினார். துணை தலைவர் முருகன், ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திர சேகரன், ஞானதிருப்பதி, அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.தேனி கோட்ட தபால் அலுவலகத்தில் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் கொடி ஏற்றி மரியாதை செய்தார். அஞ்சலக ஊழியர்கள் பங்கேற்றனர். இதுதவிர நேற்று மாவட்டத்தின் பல்வேறு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் சார்பில் கொரோனா விதிகளை பின்பற்றி குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

போடி: போடி அ.தி.மு.க., அலுவலகத்தில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். நகர செயலாளர் பழனிராஜ், துணைச் செயலாளர் ஜெயராமன், மாவட்ட மாணவரணி துணை தலைவர் பாஸ்கரன் பங்கேற்றனர்.போடியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி உம்முல் பரிதா தலைமை வகித்து கொடியேற்றினார். வழக்கறிஞர் சங்க தலைவர் முருகன், செயலாளர் சந்திரசேகர், அரசு வழக்கறிஞர் மணி பங்கேற்றனர். போடியில் முன்னாள் ராணுவத்தினர் சங்க அலுவலகத்தில் நகராட்சி கமிஷனர் சகிலா கொடியேற்றினார். சங்க தலைவர் கணேசன், செயலாளர் முருகன், கவுரவத் தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் முனிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.போடி சி.பி.ஏ., கல்லூரியில் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.

முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பாலமுருகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் கமலநாதன், ராஜேந்திரன், சையது இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். என்.சி.சி திட்ட அலுவலர் சிவா வரவேற்றார். செயலாளர் புருஷோத்தமன் கொடியேற்றினார். கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தில் தலைவர் காந்தி கொடியேற்றினார். செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ராமமூர்த்தி, அலுவலக செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர்கள் பரமசிவம், விஜயகுமார், சுப்பிரமணியன் பங்கேற்றனர்.போடி ஏல விவசாயிகள் சங்கத்தில் தலைவர் சுப்பிரமணியன் கொடியேற்றினார். செயலாளர் புருஷோத்தமன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், நித்யானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர். தி கிரீன் லைப்வுண்டேஷன் சார்பில் தலைவர் நாகராஜ் தலைமையில் மரக்கன்று நடும் விழா நடந்தது. செயலாளர் சுந்தரம், துணைத்தலைவர் விஸ்வநாதன், இளையோர் அணி இணைச் செயலாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்

. போடி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கமிஷனர் சகிலா கொடியேற்றினார். உதவி பொறியாளர் ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டார்.போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளியில் செயலாளர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்து கொடியேற்றினார். தலைமையாசிரியர் ராமசுப்பிரமணி உட்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அன்னை இந்திரா நினைவு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவனேஸ்வர மணிச்செல்வன் கொடியேற்றினார். போடி நகர் காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் முசாக் மந்திரி கொடியேற்றினார். மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முகமது ரசூல் உட்பட பலர் பங்கேற்றனர்.கம்பம்: நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கமிஷனர் பாலமுருகன் தேசிய கொடியை ஏற்றினார் பொறியாளர் பன்னீர் பங்கேற்றனர். ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனம்மாள் தண்டபாணி கொடியை ஏற்றினார்கள். கம்பம் அரசு மருத்துமனையில் மருத்துவ அலுவலர் பொன்னரசன் கொடியை ஏற்றினார். சிபியூ மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் திருமலைசந்திரசேகரன் கொடியை ஏற்றி வைத்தார். தலைமை ஆசிரியர் சரவணன் பங்கேற்றனர்.ராமஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சேர்மன் சௌந்தரராஜன் கொடியை ஏற்றினார்.போலீசார் பள்ளியில் பணியில் சேர்மன் ராஜாங்கம் கொடியை ஏற்றினார்.

பொருளாளர் ஜெகதீஷ், துணை தலைவர் அசோக் பங்கேற்றார்.நாலந்தா மெட்ரிக் பள்ளியில் பள்ளியின் தாளாளர் விஸ்வநாதன் கொடியை ஏற்றினார் .ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, முதல்வர் மோகன் பங்கேற்றனர்.சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் அச்சுத நாகசுந்தர் கொடியை ஏற்றி வைத்தார்.நாகமணி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளியின் தாளாளர் காந்தவாசன் தேசியக் கொடியேற்றினார். இணைச் செயலாளர் சுகன்யா, முதல்வர் புவனேஸ்வரி, துணை முதல்வர் லோகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.உத்தமபாளையம் : உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் கொடியை தாசில்தார் அர்ச்சுனன் ஏற்றினார். ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் முதல்வர் முகமது மீரான் கொடியை ஏற்றினார். என்.எஸ்.எஸ்.,திட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். டிஎஸ்பி அலுவலகத்தில் ஏ.எஸ்,பி .ஸ்ரேயா குப்தா, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. கவுசல்யா கொடி ஏற்றினார்கள். ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., ஜெயகாந்தன் கொடியை ஏற்றினார்.சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் சியாமளா கொடியை ஏற்றினார். சுகாதார அலுவலர் அரசகுமார் பங்கேற்றனர். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சேகர் கொடியை ஏற்றினார்.காமயகவுண்டன்பட்டி காந்தி மண்டபம் முன்பாக கிராம தலைவர் மோகன்தாஸ் கொடி ஏற்றினார்.

ஓய்வூதியர் சங்க தலைவ அரங்கசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பெரியகுளம்: - பெரியகுளத்தில் தேனி எம்.பி., ரவீந்திரநாத் அலுவலகத்தில் குடியரசு தின விழாவையொட்டி எம்.பி.,தேசிய கொடி ஏற்றினார். பள்ளி மாணவ, -மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, நகர செயலாளர் ராதா, துணை செயலாளர் அப்துல் சமது, நிர்வாகிகள் முருகானந்தம்,நாராயணன், ராஜகோபால், சிவகுமார், அன்பு,ராஜசேகரன் பங்கேற்றனர்.முன்னாள் முப்படை வீரர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் கொடியேற்றினார். சட்ட ஆலோசகர் ராஜாராம், உதவி பொருளாளர் முத்துலட்சுமி, முன்னாள் ராணுவவீரர் காமராஜ் பாண்டியன் பங்கேற்றனர்.சப்-- -கலெக்டர் அலுவலகத்தில், சப்- -கலெக்டர் ரிஷப் கொடியேற்றினார். மாவட்ட அரசு மருத்துவமனையில் நிலைய மருத்துவ அலுவலர் ஆசியா கொடியேற்றினார். செவிலியர் கண்காணிப்பாளர் ராஜாக்கனி பங்கேற்றனர்.

தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராணி கொடியேற்றினார. மாவட்ட கல்வி அலுவலகத்தில் பள்ளி துணை ஆய்வாளர் வெங்கடேசன் கொடியேற்றினார். பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் புனிதன் தலைமையில் சரவணக்குமார் எம்.எல்.ஏ.,கொடியேற்றினார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் தங்கவேல் கொடியேற்றினார்.பி.டி.ஓ.,க்கள் மோனிகா,ஜெகதீசன் பங்கேற்றனர். வடுகபட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் அம்புஜம், தாமரைகுளம் பேரூராட்சியில் செயல் அலுவலர் பஷீர் அகமது, தென்கரை பேரூராட்சியில் குடிநீர் திட்ட உதவியாளர் பிரபாகரன், தேவதானப்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன, கெங்குவார்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் கெங்காதரன் கொடியேற்றினர்.டி.எஸ்.பி., அலுவலகத்தில் சிறப்பு எஸ்.ஐ நந்தக்குமார் கொடி ஏற்றினார். வடகரை ஸ்டேஷனில் எஸ்.ஐ.,சதீஷ், தென்கரை ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சுகுமார்,தேவதானப்பட்டி ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், ஜெயமங்கலம் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,சாகுல் அமீது கொடியேற்றினர்.கீழ வடகரை ஊராட்சியில் தலைவர் செல்வராணி கொடியேற்றினார். ஊராட்சி செயலர் ஜெயபாண்டியன் பங்கேற்றனர். லட்சுமிபுரம் ஊராட்சியில் தலைவர் ஜெயமணி கொடியேற்றினார், செயலர் நந்தினி பங்கேற்றார். சருத்துப்பட்டி ஊராட்சியில் தலைவர் சாந்தி கொடியேற்றினார். செயலர் லெனின் பங்கேற்றார். எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியில் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் பாண்டிராஜ் கொடியேற்றினார். டி. வாடிப்பட்டி ஊராட்சியில் தலைவர் தங்கராஜ் கொடியேற்றினார்.

செயலர் வீரபத்திரன் பங்கேற்றார். குள்ளப்புரம் ஊராட்சியில் துணைத்தலைவர் பாஸ்கரன் கொடியேற்றினார். செயலர் முத்துச்செல்வம் பங்கேற்றார். ஏ.வாடிப்பட்டி ஊராட்சியில் தலைவர் ஜெயராம் கொடியேற்றினார்.செயலர் செல்லபாண்டியன் கலந்து கொண்டார்.ஜல்லிபட்டி ஊராட்சியில் தலைவர் கண்மணி கொடியேற்றினார்,செயலர் லெனின் பங்கேற்றார். மேல்மங்கலம் ஊராட்சியில் தலைவர் நாகராஜன் கொடியேற்றினார், செயலர் முருகன் பங்கேற்றார். சில்வார்பட்டி ஊராட்சியில் தலைவர் பரமசிவம் கொடியேற்றினார்.செயலர் கணபதி பங்கேற்றார். முதலக்கம்பட்டி ஊராட்சியில் தலைவர் பிரபா கொடியேற்றினார். செயலாளர் கோபால் கலந்து கொண்டார். ஜெயமங்கலம் ஊராட்சியில் தலைவர் அங்கம்மாள் கொடியேற்றினார. செயலர் கோபால் பங்கேற்றார்.

அழகர்நாயக்கன் பட்டி ஊராட்சியில் தலைவர் கோட்டையம்மாள் கொடியேற்றினார், ஊராட்சி செயலாளர் பொறுப்பு பாண்டிராஜ் ங்கேற்றார்.பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் தலைவர் சம்சுல்குதா கொடியேற்றினார். செயலர் சாகுல் ஹமீது பங்கேற்றார். அனைத்து ஊராட்சிகளிலும் வார்டு உறுப்பினர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.*பெரியகுளம்: வடுகபட்டியில் பா.ஜ., மாநில செயலாளர் (ஐ.டி., பிரிவு) வசந்த் பாலாஜி கொடியேற்றினார். ஒன்றிய செயலாளர் ராஜவேல், மாவட்டசெயற்குழு சேது, மாவட்ட கல்வியாளர் பிரிவு செயலாளர்கள் விஜயகுமார், முருகேசன், நிர்வாகிகள ராமகுரு, சுப்புராஜ், பழனிவேல் பங்கேற்றனர்.பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் முதல்வர் சேசுராணி தலைமை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் சாந்தி கொடியேற்றினார். மாணவிகள் பேரவை தலைவி வேளாங்கன்னி நன்றி கூறினார். நல்லகருப்பன்பட்டி மேரி மாதா கல்லூரியில் முதல்வர் ஐசக் பூச்சாங்குளம் கொடியேற்றினார் . பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதல்வர் ஆறுமுகம் கொடியேற்றினார். வடுகபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் செல்வராஜ் கொடியேற்றினார்.தலைமையாசிரியர் சின்ன ராஜா பங்கேற்றனர். லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர் ஜெயமணி கொடியேற்றினார். தலைமை ஆசிரியை பேபி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமணன் பங்கேற்றனர். டிரயம்ப் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ராம் சங்கர் கொடியேற்றினார்.

டேவிட் துவக்கப்பள்ளியில் பள்ளி செயலர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.மூத்த ஆசிரியை தமிழ்ச்செல்வி கொடியேற்றினார் . பிரசிடென்சி மழலையர் துவக்கப்பள்ளியில் பள்ளிச் செயலர் ராஜ்குமார் தலைமை வகித்தார். முதல்வர் புவனேஸ்வரி கொடியேற்றினார்.பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாங்குனி அரிமா சங்கத் தலைவர் ஐயப்பன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் கோபிநாத் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை ராஜலட்சுமி கொடியேற்றினார். முருகமலை நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியை நாகஜோதி கொடியேற்றினார். ஆசிரியர்கள் அருள் ரமேஷ், கார்த்திகா பங்கேற்றனர். ஜி கல்லுப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் உதவி தலைமையாசிரியர் பூமிபாலன் கொடியேற்றினார், சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் பொறுப்பு செல்வகுமார் கொடியேற்றினார்.

தாமரைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ரவீந்திரன் கொடியேற்றினார். நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளிகள் தாளாளர் முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பாலசுப்ரமணி கொடியேற்றினார் நிர்வாக குழு உறுப்பினர் தேவப்பிரியா பங்கேற்றார்.வடகரை பி.டி.ராஜன் துவக்கப்பள்ளியில் பள்ளியில் செயலாளர் முத்து மாணிக்கம் தலைமை வகித்தார்.தலைமையாசிரியர் லட்சுமணராஜா கொடியேற்றினார .நிர்வாக குழு உறுப்பினர் பவானி மகேஸ்வரி பங்கேற்றார். புத்தர் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் துரை வேணுகோபால் கொடியேற்றினார், ஆசிரியர் அன்புச்செழியன் பங்கேற்றனர்.ஹமீதியா நடுநிலைப்பள்ளியில் பள்ளி நிர்வாகி முகமது ரபீக் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை பாத்திமா ராணி கொடியேற்றினார். சேக்கிழார் நடுநிலைப்பள்ளிகள் பள்ளி நிர்வாகி தாமோதரன் கொடியேற்றினார்.

தலைமையாசிரியர் விஜயகுமார் உதவி ஆசிரியை ராமலட்சுமி பங்கேற்றனர்.ஆண்டிபட்டி : ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் லோகிராஜன் கொடியேற்றினார். துணைத் தலைவர் வரதராஜன், கிராம ஊராட்சி பி.டி.ஓ.,ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர். ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன் கொடியேற்றினார். ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் ஜெயபாரதி கொடியேற்றினார். டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் வேல்மணி கொடியேற்றினார். மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், ஊராட்சி செயலாளர் ராஜேஷ் பங்கேற்றனர். ஆண்டிபட்டி போதி மனநல காப்பகத்தில் மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் கொடியேற்றினார். ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் பள்ளி ஆலோசகர் தமயந்தி கொடியேற்றினார். தாளாளர் ஹென்றிஅருளானந்தம் முன்னிலை வகித்தார்.

பள்ளி செயலாளர் மேத்யூ ஜோயல், முதல்வர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டனர்.கூடலூர்: நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் சித்தார்த் கொடியேற்றினார். சுகாதார ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூடலூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் முத்துமணி, தெற்கு ஸ்டேஷனில் எஸ்.ஐ., மணிகண்டன் கொடியேற்றினார்கள். மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் கன்னிகாளிபுரத்தில் நகராட்சி கமிஷனர் சித்தார்த் கொடியேற்றினார். எஸ்.டி.பி.ஐ., கட்சியின் சார்பில் நகர தலைவர் அக்கீம் ராஜா முன்னிலையில், ஆண்டிப்பட்டி தொகுதி தலைவர் அஜ்மீர்கான் கொடியேற்றினார். த.மு.மு.க., சார்பில் நகர தலைவர் சாகுல் ஹமீது தலைமையில், முகைதீன் ஆண்டவர்பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அப்துல் ரஹீம் கொடியேற்றினார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் அப்பாஸ் மந்திரி, செயலாளர் ஹைதர் அலி கலந்து கொண்டனர்.பாரதிய கிசான் சங்கம் தலைவர் சதீஷ்பாபு முன்னிலையில், முல்லைச் சாரல் விவசாய சங்க தலைவர் கொடியரசன் கொடியேற்றினார். பழைய பஸ் ஸ்டாண்டில் பா.ஜ., நகர தலைவர் முருகேசன் கொடியேற்றினார். செயலாளர் சுப்பிரமணியம், ஹிந்து முன்னணி நகர தலைவர் தெய்வேந்திரன், செயலாளர் ஜெகன் கலந்து கொண்டனர்.புது பஸ் ஸ்டாண்டில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கம் சார்பில் தலைவர் அழகேசன் கொடியேற்றினார்.

கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி மன்றத்தில் தலைவர் மொக்கப்பன் கொடியேற்றினார். குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி மன்றத்தில் தலைவர் பொன்னுத்தாய் கொடியேற்றினார். கவுன்சிலர்கள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.கூடலூர் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் வெங்கட் குமார் முன்னிலையில், தலைமை ஆசிரியர் முருகேசன் கொடியேற்றினார். திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் மூர்த்திராஜன் தலைமையில், தலைமை ஆசிரியை பிரபாவதி கொடியேற்றினார். ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் டேனியல் கொடியேற்றினார். வ.உ.சி., நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அருண் பிரசன்னா கொடியேற்றினார். என்.எஸ்.கே.பி., காமாட்சி அம்மாள் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை சத்தியபாமா கொடியேற்றினார்.

மழலையர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை ஷகிலா சுலைமான் கொடியேற்றினார்.கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் துணை முதல்வர் வாணி முன்னிலையில், முதல்வர் ரேணுகா கொடியேற்றினார்.குள்ளப்பகவுண்டன்பட்டி ராமகிருஷ்ணன் சந்திரா கல்வி நிறுவனத்தில் தாளாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், பொருளாளர் சந்திரா கொடியேற்றினார். கம்பம் சிஷ்யா அகாடமியில் தாளாளர் கோபிநாத் தலைமையில், செயலாளர் பிரியா கொடியேற்றினார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X