ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 1500 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஒட்டன்சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது.
மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசன் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி., சோமசுந்தரம் ஆலோசனைப்படி, எஸ்.ஐ., கணேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் உள்ள குடோன் ஒன்றில் 1500 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த அஷ்ரப் அலியை 31, போலீசார் கைது செய்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.இவற்றை கண்டுபிடித்த தனிப்படை எஸ்.ஐ., கணேசன் மற்றும் போலீசார் அருள்ராஜ், முத்துச்சாமி , மாரிஸ், ராம்குமார், பிரபு ஆகியோரை எஸ்.பி., பாராட்டினார். இப்பொருட்களை வைத்திருப்பவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என எஸ்.பி., எச்சரிக்கை விடுத்தார்.