மாமல்லபுரம்:உலக நாடுகளில் சர்வதேச பாரம்பரிய சின்னங்கள் உள்ளிட்ட வகைகளில், சுற்றுலா இடங்கள் அமைந்து, அவற்றை பயணியர் கண்டு களிக்கின்றனர்.
சுற்றுலா விழிப்புணர்வு மற்றும் மேம்பாட்டிற்காக, உலகில் ஆண்டுதோறும் செப்., 27ம் தேதி, சர்வதேச சுற்றுலா தினம், இந்திய நாட்டில், ஜன., 25ம் தேதி, தேசிய சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.தேசிய சுற்றுலா தினமான நேற்று முன்தினம், மாமல்லபுரத்தில், தொல்லியல் உதவி பொறியாளர் சரவணன், பராமரிப்பு அலுவலர் இஸ்மாயில் உள்ளிட்டோர், பாரம்பரிய சின்ன பகுதியில் துாய்மைப் பணி மேற்கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.