செங்கல்பட்டு : படாளத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.செங்கல்பட்டு மாவட்டம், படாளத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை பரிசோதனை செய்யும் முறையையும், நெல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் முறையையும், கலெக்டர் ராகுல்நாத், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.மேலும், கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கான தொகையை உரிய விவசாயிகளுக்கு, உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.விவசாயிகள் பதிவு செய்வதற்காக, தன்னார்வலர்கள் மற்றும் பொது சேவை மையத்தை பயன்படுத்த வேண்டும். ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ், கலெக்டர் நேர்முக உதவியாளர் தியாகராஜன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.