சர்க்கரை ஆலையில் அரவையை துவக்ககோரி 44வது நாளாக போராட்டம் | மதுரை செய்திகள் | Dinamalar
சர்க்கரை ஆலையில் அரவையை துவக்ககோரி 44வது நாளாக போராட்டம்
Added : ஜன 27, 2022 | |
Advertisement
 

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டிற்கான கரும்பு அரவையை துவக்க வலியுறுத்தி 44வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.

விவசாயிகள் தொழிற்சங்க மாவட்ட தலைவர் உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தார்.விவசாயிகள் கூறியதாவது: சர்க்கரை ஆலை இயங்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆலையில் கரும்பு அரவையை துவக்க கோரி முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். விவசாயிகள் நிலைமையை புரிந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க., அரசு செய்த தவறை தி.மு.க., அரசும் செய்ய கூடாது என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X