கொள்முதலில் குளறுபடி; திறந்த வெளியில் நெல் மூடைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
04:17

தளவாய்புரம் : தேவதானம் அருகே கோவிலுாரில் புதிதாக திறக்கப்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையம் மந்தமாக செயல்படுவதால், விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் மூடைகள் திறந்த வெளியில் உள்ளது.

இதனால் மழை, வெயிலுக்கு பயந்த விவசாயிகள் வேறு வழியின்றி வியாபாரிகளிடம் விற்கும் நிலை தொடர்கிறது.கோவிலுாரில் அரசு சார்பில் ஜன. 17 முதல் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 800 மூடைகள் வரை கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. மூட்டை ஒன்றுக்கு ரூ.1440 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. தினமும் விவசாயிகள் 2 ஆயிரம் மூடை நெல்லினை குவித்த வண்ணம் உள்ளனர். இங்கு 800 மூடைகள் வாங்குவதாக கூறி விட்டு 300 மூடைகளையே கொள்முதல் செய்கின்றனர். இதனால் 4 ஆயிரம் மூடை நெல் திறந்தவெளியில் தேங்கி கிடக்கிறது.மழை உள்ளிட்ட இயற்கை பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க களத்திலேயே தனியார் வியாபாரிகளுக்கு விற்கும் அவலம் தொடர்கிறது. இதுவரை கொள்முதல் செய்தவர்களுக்கான பணமும் கணக்கில் வந்து சேரவில்லை என்கின்றனர்

விவசாயிகள்.விவசாயி அருஞ்சுனை செல்வமணி: கொள்முதல் செய்வதில் ஆன்லைன் மூலம் ஒதுக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரம் வரை தாமதம் ஏற்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகளுக்கு இதுவரை பணம் பட்டுவாடாவும் செய்யப்படவில்லை. அதிகாரிகளிடமும் இது குறித்து சரியான தகவல் பெற முடியவில்லை,என்றார். விவசாயி திலகம்: நெல் மூடைகளுடன் காத்திருந்தோம். திறந்தவெளியில் பாதுகாப்பு இல்லாத நிலையில் மழையில் நனையும் வாய்ப்பு உள்ளதால், இதை கருதி வேறு வழியின்றி தனியார் வியாபாரிகளிடம் விற்கிறோம். இதனால் விவசாயிகளுக்கு ரூ. பல ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது,என்றார். நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் கண்ணன்: நெல் மூடைகளை சேமிப்பு கிட்டங்கிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X