காரைக்குடி : குடியரசு தின விழாவை முன்னிட்டு காரைக்குடியில் சீமை பட்டாளம் அமைப்பு சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. வயது 25 க்கு உட்பட்டோருக்கு 5 கி.மீ., துாரம் நிர்ணயித்தனர். மேஜர் முருகானந்தம் துவக்கிவைத்தார். முன்னாள் ராணுவ வீரர்கள் சத்தியமூர்த்தி, உத்ராபதி பங்கேற்றனர். முதல் பரிசை நீலகிரி குணாளன், 2ம் பரிசு கோகுல், 3 ம் பரிசை தினேஷ், ஜான் ஆகியோர் பெற்றனர்.