விருதுநகர் : விருதுநகரில் நடந்த 72வது குடியரசு தின விழாவில் 137 போலீசாருக்கு முதல்வர் பதக்கம் வழங்கி கலெக்டர் மேகநாதரெட்டி கவுரவித்தார். மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கலெக்டர் மேகநாதரெட்டி கொடியேற்றினார். போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 137 போலீசாருக்கு முதல்வர் பதக்கங்கள், பாராட்டு சான்றுகளை வழங்கினார்.
தியாகிகள், வாரிசுதாரர்கள் கவுரவிக்கப்பட்டனர். கலைநிகழ்ச்சிகள், அலுவலர்களின் சிலம்பாட்டம் நடந்தன. சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் 339, தீயணைப்புத்துறையில் 5, வருவாய்த்துறையில் 132 என மொத்தம் 476 அலுவலர்கள் கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர், போர் விதவையர்களுக்கு வருடாந்திர பராமரிப்பு மானியமாக 2 நபர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.
எஸ்.பி., மனோகர், டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன், திட்ட இயக்குநர் திலகவதி, சப் கலெக்டர் பிரித்திவிராஜ், முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, கலெக்டர் நேர்முக உதவியாளர் காளிமுத்து பங்கேற்றனர்.* விருதுநகர் தினமலர் நகரில் தினமலர் கிளை அலுவலகத்தில் காலை 8:30 மணிக்கு கொடியேற்றப்பட்டது.* விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் கொடி ஏற்றினார். உதவி மாவட்ட அலுவலர் மணிகண்டன், நிலைய அலுவலர் கண்ணன் பங்கேற்றனர்.
விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் சையது முஸ்தபா கமால் கொடியேற்றினார். பொறியாளர் மணி, நகர்நல அலுவலர் யோகேஷ் பங்கேற்றனர். * செந்திக்குமார நாடார் கல்லுாரியில் தலைவர் பழனிச்சாமி கொடியேற்றினார். முதல்வர் சுந்தரபாண்டியன், உப தலைவர் மோகன், செயலாளர் சர்ப்பராஜன், பொருளாளர் சக்திபாபு பேசினர். தேசிய மாணவர் படை, நாட்டுத் தொண்டு திட்டம், செஞ்சுருள் சங்கம், விளையாட்டு துறை மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. மரக்கன்றுகள் நடப்பட்டது.* வன்னிய பெருமாள் பெண்கள் கல்லுாரியில் தலைவர் செந்தில்குமார் கொடி ஏற்றினார். கல்லுாரி புரவலர் மகேந்திரன், உபதலைவர் வசந்தி, செயலாளர் கோவிந்தராஜ பெருமாள், கூட்டுச் செயலாளர் லதா, பொருளாளர் காமராஜ், முதல்வர் மீனா ராணி, பேராசிரியர் அதிர்ஷ்டகுமாரி பங்கேற்றனர்.
எம்.எஸ்.பி.,நாடார் கல்வியியல் கல்லுாரியில் தலைவர் பழனிச்சாமி கொடியேற்றினார். முதல்வர் சுரேஷ்குமார், உப தலைவர் மோகன், செயலாளர் சர்பராஜன், பொருளாளர் சக்திபாபு, பேராசிரியர் ராஜமரகதம் பங்கேற்றனர்.* நோபிள் பள்ளியில் நோபிள் கல்வி குழும தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம் தலைமையில் துணை முதல்வர் பழனிகுமார் தேசிய கொடி ஏற்றினார். * நோபிள் பெண்கள் கலை கல்லுாரியில் செயலாளர் வெர்ஜின் இனிகோ தலைமையில் முதல்வர் மீனாட்சி சுந்தரம் தேசிய கொடி ஏற்றினார்.
கே.வி.எஸ்., நுாற்றாண்டு பள்ளியில் தலைவர் குணசேகரன் தேசிய கொடி ஏற்றினார். பள்ளிச் செயலர் ராஜா, இணைச் செயலாளர் பாலாஜி, பொருளாளர் முருகேசன் பங்கேற்றனர்.* கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சந்திரமோகன், கே.கே.வி.எஸ்., நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜவேல், திருவள்ளுவர் வித்யா சாலா நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தனசேகரன், சரஸ்வதி வித்யாசாலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ஈஸ்வரி, சுப்ரமணியா வித்யா சாலா பள்ளியில் தலைமை ஆசிரியர் லதா கொடி ஏற்றினார்.* ஆமத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சர்மிளா கொடி ஏற்றினார். மாநில அளவிலான யோகா போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற மாணவிகள் பத்மபிரியா, ஜெகதீஸ்வரி ஆகியோருக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் முத்துபாண்டி, தங்கம்மாள், பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு முதன்மை மாவட்ட பொறுப்பு நீதிபதி தனசேகரன் கொடியேற்றினார். கூடுதல் மாவட்ட நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதிபதி கஜரா ஆர்.ஜி.ஜி., முதன்மை சார்பு நீதிபதி செல்வன் ஜேசுராஜா, கூடுதல் சார்பு நீதிபதி மோகனா, விரைவு நீதித்துறை நீதிபதி சந்திரகாசபூபதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி பரம்வீர், மகளிர் கோர்ட் நீதிபதி சிவராஜேஷ், நீதிமன்ற அலுவலர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தலைமை நிர்வாக அலுவலர், நீதித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.* நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் மல்லிகா தேசியக்கொடி ஏற்றினார். மேலாளர் பாபு, பொறியாளர் தங்கபாண்டியன் பங்கேற்றனர்.
வட்டார கல்வி அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலர் மலர்கொடி முன்னிலையில் வட்டார கல்வி அலுவலர் செல்வலட்சுமி கொடியேற்றினார்.* கலசலிங்கம் பல்கலையில் துணைத் தலைவர் சசி ஆனந்த் தலைமையில் பதிவாளர் வாசுதேவன் கொடியேற்றினார். துணைவேந்தர் நாகராஜ், கல்லூரி முதல்வர்கள், டீன்கள், துறைத் தலைவர்கள், இயக்குனர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.* மல்லி சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் செயலாளர் திலீபன்ராஜா கொடியேற்றினார். நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், முதல்வர் மல்லப்பராஜ் பங்கேற்றனர்.* லயன்ஸ் சர்வதேச பள்ளியில் அரிமா சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார். தாளாளர் வெங்கடாசலபதி, முதல்வர் ஹெப்சிபா, நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.* வைத்தியலிங்கபுரம் விநாயக துவக்கப்பள்ளியில் பள்ளி செயலாளர் ராமசாமி கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் சாந்தி, கல்வி கமிட்டி தலைவர் மாரிமுத்து பங்கேற்றனர்.
மகாத்மா வித்யாலயா பள்ளியில் தாளாளர் முருகேசன் கொடியேற்றினார். முதல்வர் ராணி, ஆசிரியைகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.* படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில், மேலாண்மைக்குழு தலைவர் ஆனந்த ஜோதி கொடியேற்றினார். ஆசிரியர் ரோஸ்லின்ராஜ், தன்னார்வலர் வசந்தி பங்கேற்றனர்.* திருவண்ணாமலை ஊராட்சி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மேரி தலைமையில், மேலாண்மை குழு தலைவர் மணிமாலா முன்னிலையில் ஊராட்சி தலைவர் மீனா தேசியக்கொடி ஏற்றினார்.
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் விஜயலட்சுமி கொடியேற்றினார். அலுவலர்கள் பங்கேற்றனர். * தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் அறிவழகன் கொடியேற்றினார். அலுவலர்கள் பங்கேற்றனர்* டி.எஸ்.பி., அலுவலகத்தில் சகாயஜோஸ் டி.எஸ்.பி., கொடியேற்றினார். டவுன் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தாலுகா ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், மகளிர் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, பந்தல்குடி ஸ்டேஷனில் எஸ்.ஐ., முத்துராஜ் கொடியேற்றினர்.* அருப்புக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் சசிகலா பொன்ராஜ் கொடியேற்றினார். பி.டி.ஓ., காஜா மைதீன் வந்தே நவாஸ், கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். * அரசு மருத்துவமனையில் டாக்டர் ஜெகமணி கொடியேற்றினார். டாக்டர்கள் சந்திரமெளலி, அமர்நாத், பாலசுப்பிரமணியன், அலுவலர் பாலமுருகன், பார்மசிஸ்ட் மணிசங்கர் பங்கேற்றனர்.
வட்டார கல்வி அலுவலகத்தில் கல்வி அலுவலர் செல்வக்குமார் கொடியேற்றினார். கல்வி அலுவலர் சையது அலி பாத்திமா முன்னிலை வகித்தார். கண்காணிப்பாளர் உதயக்குமார், அலுவலர்கள் பங்கேற்றனர். * அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலகத்தில் மேற்பார்வையாளர் வினோதா கொடியேற்றினார். * ஸ்ரீ ரமணாஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயலாளர் டாக்டர் இளங்கோவன் கொடியேற்றினார். முதல்வர் கதிர்காமு, நிர்வாகிகள் ராமச்சந்திரன், சங்கர நாராயணன், விக்னேஷ், அருண் பங்கேற்றனர். * ஸ்ரீ ரமணாஸ் கல்வியியல் கல்லூரியில் செயலாளர் சங்கரநாராயணன் கொடியேற்றினார். முதல்வர் ராஜேந்திரன், நிர்வாகிகள் இளங்கோவன், ராமச்சந்திரன், விக்னேஷ், அருண் பங்கேற்றனர். * ரத்தினம் நர்சிங் கல்லுாரியில் டிரஸ்டி ரஜித்குமார் கொடியேற்றினார். முதல்வர் தாமரைச்செல்வி, ஆசிரியர்கள் பங்கேற்றனர். * எஸ்.பி.கே., கல்லுரியில் முதல்வர் முத்துச்செல்வன் கொடியேற்றினார். நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். * எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமையாசிரியர் ஆனந்தராஜன், பெண்கள் மேல்நிலை பள்ளியில் தங்கரதி கொடியேற்றினர்.* எஸ்.பி.கே., இன்டர்நேஷனல் பள்ளியில் செயலாளர் ராஜேஸ்குமார் கொடியேற்றினார்.* ஆ.கல்லுப்பட்டி சித்தி விநாயகர் இந்து துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் சரளா தேவி கொடியேற்றினார்.சாத்துார்: சாத்துார் டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ் .பி., நாகராஜன் கொடியை ஏற்றினார். போலீசார், அலுவலர்கள் பங்கேற்றனர்.
சாத்துார் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் நித்யா கொடியேற்றினார். அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். *சாத்துார் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் தலைமை வகித்து கொடி ஏற்றினார். துணைத் தலைவர் செல்லத் தாய் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள், பி.டி.ஓ.,க்கள் பங்கேற்றனர். * வெம்பக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் பஞ்சவர்ணம் தலைமை வகித்து கொடி ஏற்றினார். துணைத் தலைவர் ராமராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். *சாத்துார் எஸ்.ஆர்.என்., கல்லுாரியில் முதல்வர் கணேஷ்ராம் தலைமை வகித்து கொடி ஏற்றினார். கல்லுாரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர் * சாத்துார் மேட்டமலை ஸ்ரீகிருஷ்ணசாமி கலை கல்லுாரி, பி.எஸ்.என்.எல். (பி.எட்.,) கல்லுாரியில் தலைவர் ராஜு தேசியக் கொடியேற்றினார். ஆலோசகர் கோபாலகிருஷ்ணமூர்த்தி, முதல்வர்கள், கண்ணன், ராஜேஸ்வரி, பேராசிரியர்கள் பங்கேற்றனர். * எஸ்.எச்.என்., எட்வர்டு மேல்நிலைப் பள்ளியில் செயலாளர் மெஜஸ்டிக் தியாகராஜன் தலைமை வகித்து கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் முருகேசன் வரவேற்றார். உதவி தலைமையாசிரியர் தேவதாசன் நன்றி கூறினார்.* சாத்துார் ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ராமராஜ் வரவேற்றார். கல்வி நல குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமை வகித்து கொடியேற்றினார்.
பி.டி.ஏ., தலைவர் சேதுராமலிங்கம் முன்னிலை வகித்தார். * சாத்துார் தாலுகா அலுவலகம் முன்பு த.மு.எ.க., சங்கம் சார்பில் நடந்த விழாவில் ஒன்றியக் குழுத் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் கொடி ஏற்றினார். கிளை தலைவர் பிரியா கார்த்திக் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன் உறுதி மொழி வாசித்தார். கலை இலக்கிய பெரு மன்றம் தலைவர் டாக்டர் அறம், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் சந்திரன், பெரியார் காமராஜர் கல்வி அறக்கட்டளை தலைவர் அசோக், மாவட்ட சாலை போக்குவரத்து சங்கத் தலைவர் விஜயகுமார், தி.மு.க.நகர செயலாளர் குருசாமி, ஒன்றியசெயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன், ம.தி.மு.க. நகர செயலாளர் கணேஷ்குமார், மார்க்சிஸ்ட் நகர செயலாளர் பெத்துராஜ் பங்கேற்றனர். * சாத்துார் நகர, வட்டார காங்., சார்பில் நகர தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் பாலு நாயக்கர் கொடி ஏற்றினார். மாவட்ட பொதுச் செயலாளர் ஜோதி நிவாஸ், செயலாளர் சந்திரன், தொகுதி இளைஞர் காங்., தலைவர் கும்கி கார்த்திக், ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர துணைத் தலைவர் ஜெயபாலன் பங்கேற்றனர்.
சிவகாசி: சிவகாசி சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் சப்கலெக்டர் பிரதிவிராஜ் கொடி ஏற்றினார்.* சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார். * சிவகாசி டி.எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் கொடியேற்றினார்.* சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி கொடியேற்றினார். உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி, ஒருங்கிணைப்பாளர் கவிதா கலந்து கொண்டனர்.* ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் ஜே.சி.ஐ., சிவகாசி டைனமிக் குழு தலைவர் ஹரிபிரசாத் கொடியேற்றினார். பள்ளி தலைமை முதல்வர் பாலசுந்தரம், தாளாளர் ஜெயக்குமார், முதல்வர் அம்பிகாதேவி, துணை முதல்வர்கள் ஞானபுஷ்பம், சுதா பங்கேற்றனர். * சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் செயலாளர் செல்வராசா கொடியேற்றினார். துணை முதல்வர் பாலமுருகன் நன்றி கூறினார். பங்கேற்றவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.* அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின விழாவில் கல்லூரி முதல்வர் தீபிகா கொடியேற்றினார். உடற்கல்வி பேராசிரியர் தங்கம் வரவேற்றார். உயர் அறிவியல் துறை பேராசிரியர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.* சிவகாசி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் ஒன்றியக்குழு தலைவர் முத்துலட்சுமி கொடியேற்றினார். துணைத் தலைவர் ஜெகன் ராஜ், பி.டி.ஓ.,க்கள் சீனிவாசன், ராம்ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.* சிவகாசி பா.ஜ., சார்பில் குமரி பாஸ்கர் தலைமை வகித்தார். மாநகர தலைவர் குருநாதன், மாவட்ட பொதுசெயலாளர் சுரேஷ், பொருளாளர் சீனிவாசன், அரசு தொடர்பு மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், வர்த்தக அணி வாசியப்பன் முன்னிலை வகித்தனர். ஊடக பொறுப்பாளர் ஆறுமுகசாமி, நகர தலைவர் கலையரசன், நிர்வாகிகள் ரவிசந்திரன், வீராச்சாமி, பாலசுப்ரமணியன், உதயசூரியன், சரவணன், காசிவிஸ்வநாதன், மகளிர் அணி மாவட்ட தலைவி சந்தனகுமாரி, மல்லிகா பங்கேற்றனர்.
சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியன் கொடி ஏற்றினர். * ஊராட்சிகளில் நடந்த குடியரசு தின விழாவில் பள்ளபட்டி ஊராட்சியில் தலைவர் உசிலைசெல்வம், விஸ்வநத்தம் ஊராட்சியில் தலைவர் நாகராஜ், ஆணையூர் ஊராட்சியில் தலைவர் லட்சுமி நாராயணன், தேவர்குளம் ஊராட்சியில் தலைவர் முத்துவள்ளி, சித்துராஜபுரம் ஊராட்சியில் தலைவர் லீலாவதி, செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் தலைவர் கருப்பசாமி, ஆனைக்குட்டம் ஊராட்சியில் தலைவர் முத்துராஜ், நாரணாபுரம் ஊராட்சியில் தலைவர் தேவராஜ், அனுப்பன்குளம் ஊராட்சியில் தலைவர் கவிதா கொடியேற்றினர். ----காரியாபட்டி: காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் கருப்புசாமி, போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் மூக்கன், ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் முத்துமாரி, பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மணிகண்டன், ஆவியூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., வீரணன், மல்லாங்கிணர் பேரூராட்சியில் செயல் அலுவலர் அன்பழகன் கொடியேற்றினர். * தோணுகால் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் பாலமுருகன் கொடியேற்றினார். * நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் பஞ்சவர்ணம் கொடியேற்றினார். வேலானூரணி ஊராட்சியில் ஒன்றிய துணைத் தலைவர் ரவிச்சந்திரன் கொடியேற்றினார்.
உளுத்திமடை ஊராட்சியில் தலைவர் ரேவதி கொடியேற்றினார். ராஜபாளையம்: ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தார் அப்பாதுரை, நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் சுந்தராம்பாள், ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் சிங்கராஜ் கொடி ஏற்றினர். * டி.எஸ்.பி அலுவலகத்தில் டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் தலைமை வகித்து கொடியேற்றினார்.
சத்திரப்பட்டி மொட்டை மலை பாலகிருஷ்ணா அறிவியல் கல்லுாரியில் தாளாளர் மாடசாமி தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் தினகரன் முன்னிலை சுரேஷ் கொடியேற்றினார். முதல்வர் அருண் நன்றி கூறினார்.* சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனிக்குரு மாடர்ன் சி.பி.எஸ்.இ., பள்ளியில் முதல்வர் சத்தியமூர்த்தி கொடியேற்றினார். பள்ளியில் நிறுவனரும் ஆறுமுகா குருப் சேர்மனுமான ஆறுமுகம், தாளாளர் பழனிக்குரு பங்கேற்றனர். சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனிக்குரு பெண்கள் கல்லுாரியில் முதல்வர் வித்யா சரஸ்வதி கொடியேற்றினார்.