பாழடைந்த சோப்பு உற்பத்திக்கூடம் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
பாழடைந்த சோப்பு உற்பத்திக்கூடம்
Added : ஜன 27, 2022 | |
Advertisement
 
Latest district News

சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சோப்பு உற்பத்தி கூட கட்டடம் பாழடைந்து இருப்பதால் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.இவ்வொன்றிய அலுவலக வளாகத்தில் 1964ல் கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் சோப்பு உற்பத்தி கூடம் அமைக்கப்பட்டது.



இங்கு தயாரிக்கப்பட்ட சோப்புகள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. நாளடைவில் இங்கு பணியாற்றிய சிலர் ஓய்வு பெற்றதால் உற்பத்தி கூடத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் மூடப்பட்டது. அதிலுள்ள இயந்திரங்கள், பொருட்கள் துருப்பிடித்து போன நிலையில் கட்டடமும் பாழடைந்து பாதி இடிந்து விழுந்துள்ளது.

இக்கட்டடத்தையொட்டி ஒன்றிய அலுவலகத்தின் பொறியியல் பிரிவு அலுவலகம் உள்ளது. சோப்பு உற்பத்தி கூட கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையில் பொறியியல் பிரிவு ஊழியர்கள் பயத்துடன் பணியாற்றி வருகின்றனர்.எனவே பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தை வேறு பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X