மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்த குடியரசு தின நிகழ்ச்சியில் போலீசாருக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்றுகளில் அவர்களின் பணியிடம் தவறாக பதிவாகி உள்ளது. பஜார் ஸ்டேஷன் என்பதற்கு பதிலாக வ.புதுப்பட்டி எனவும், அனைத்து மகளிர் ஸ்டேஷன் பதிலாக ஆயுதப்படை என அனைத்து சான்றுகளிலுமே மாறி மாறி பதிவாகி இருந்தது. முதல்வர் சான்று என்பதால் நேரடியாக சென்னையில் இருந்து வரப்பெற்றுள்ளதால் இந்த குளறுபடி நடந்தது தெரிந்தது. இதனால் சான்று பெற்ற போலீசார் குழம்பினர்.