சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் 73 வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.* சிவகங்கை தினமலர் கிளை அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது. ஊழியர்கள் பங்கேற்றனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி கொடியேற்றினார். எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். சிறப்பாக பணிபுரிந்த போலீஸ், பிற துறை அலுவலர்களுக்கு விருதும் சான்றுகள் வழங்கினர். பயனாளிகளுக்கு ரூ.1.62 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன்,
சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில்நாதன், கூடுதல் எஸ்.பி.,வெற்றி செல்வன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், கோட்டாட்சியர் சிவகங்கை முத்துகழுவன், தேவகோட்டை பிரபாகரன் பங்கேற்றனர்.* சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி சாய் பிரியா கொடியேற்றினார். நீதிபதிகள், மாஜிஸ்திரேட், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.* சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., செந்தில்குமார் கொடியேற்றினார். கூடுதல் எஸ்.பி.,க்கள் சீமைச்சாமி, வெற்றி செல்வன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்து செல்வம், எஸ்.ஐ., கோடீஸ்வரன் பங்கேற்றனர்.* சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் டீன் ரேவதி பாலன் கொடியேற்றினார். துணை முதல்வர் சர்மிளா திலகவதி, கண்காணிப்பாளர் பாலமுருகன், நிலைய மருத்துவ அலுவலர் முகமது ரபி, உதவி அலுவலர்கள் மிதுன்குமார், வித்யாஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் மனையியல் துறை தலைவர் சிவகாம சுந்தரி கொடியேற்றினார். முதல்வர் ஜெயந்தி தலைமை வகித்தார். தமிழ் துறை தலைவர் ராஜலட்சுமி உட்பட பேராசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனர்.* சிவகங்கை பனங்காடி ரோடு முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தில் லெப்டினன்ட் கர்னல் பய்ஜூ கொடியேற்றினார். சங்க முன்னாள் தலைவர் முத்து, போஸ், ஆறுமுகம், ராமலிங்கம், மீனாட்சி சுந்தரம், லெனின் பங்கேற்றனர். முன்னாள் ராணுவ வீரர் பாலு நன்றி கூறினார்.
சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதல்வர் ஜான் கொடியேற்றினார். ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது.* சிவகங்கை செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் தலைவர் பகீரதநாச்சியப்பன் தலைமையில் மாணவர் வி.ஆதித்யா கொடியேற்றினார். சேவாசமாஜ பாலர் பாதுகாப்பு இல்லத்தில் நேரு யுவகேந்திரா முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் கொடியேற்றினார். காசிராமமூர்த்தி, ஆசிரியர் அனந்தகிருஷ்ணன், கண்காணிப்பாளர் ஆண்டாள், கவிப்பிரியா, முத்துக்கருப்பன், தனலட்சுமி, களப்பணியாளர் கண்ணன், தலைமை ஆசிரியர் கீதாஞ்சலி பங்கேற்றனர்.
நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் பாலசுப்பிரமணியம் கொடியேற்றினார். பொறியாளர் பாண்டீஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள், நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.* டி.புதுார் ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 மாணவி விஜய லட்சுமி கொடியேற்றினார். தலைமை ஆசிரியர், ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.* சூரக்குளம் ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளியில் மாணவர் உமேஷ் ராம் கொடியேற்றினார். முதல்வர், ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.
சாம்பவிகா மேல்நிலை பள்ளியில் செயலர் ஏ.எம்., சேகர் தலைமை வகித்தார். தி.மு.க., நகர் செயலாளர் துரைஆனந்த் கொடியேற்றினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராஜஅமுதன், தலைமை ஆசிரியர் முத்துக்குமார், உதவி தலைமை ஆசிரியர் தியாகராஜன், பொறுப்பு ஆசிரியர் சந்திரசேகர், மகரஜோதி பங்கேற்றனர். ஆசிரியர் தனசேகர் நன்றி கூறினார்.
சோழபுரம் சுத்தானந்தபாரதி தேசிய வித்யாலயம் பள்ளியில் ஊராட்சி தலைவர் சேவியர் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் பொறுப்பு கதிரவன், ஆசிரியர் முத்துக்குமரன், அனந்தகிருஷ்ணன், ஆறு, கதிரவன் பங்கேற்றனர். ஏற்பாட்டை ஆசிரியர் சுரேஷ் செய்தார்.* சோழபுரம் ரமணவிகாஸ் மேல்நிலை பள்ளியில் ஊராட்சி தலைவர் சேவியர் கொடியேற்றினார். லயன்ஸ் உறுப்பினர்கள் ரவிக்குமார், ஜெயச்சந்திரன், முத்துக்குமார், சிங்கத்துரை பங்கேற்றனர்.
தலைமை ஆசிரியர் முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் அருள் ஆரோக்கியம் நன்றி கூறினார்.* சிவகங்கை நேருபஜார் வாலாஜா நவாப் ஜூம் ஆ பள்ளிவாசலில் வைகை பட்டாளம் அறக்கட்டளை ராணுவ வீரர்கள் கொடியேற்றினர். பள்ளி வாசல் தலைவர் அன்வர்பாட்சா, ஆதம் பள்ளிவாசல் தலைவர் ரபீக் முகம்மது, ஹவ்வா பள்ளிவாசல் தலைவர் தாஜ்ஜூதீன் ஆகியோர் தலைமை வகித்தனர்.* சிவகங்கை அல்ஹூதா இஸ்லாமிக் சர்வதேச மேல்நிலை பள்ளியில் நிர்வாக குழு உறுப்பினர் நயினா முகம்மது கொடியேற்றினார். பள்ளி தாளாளர், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.
மாணவர்கள் கபிலன், பிரபாகரன், மணிகண்டன், கயல்விழி, காவ்யா ஆகியோர் கொடியேற்றினர். ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.* சாய் பாலமந்திர் மற்றும் ஸ்ரீபாலமுருகன் நர்சரி பள்ளிகளில் தலைமை ஆசிரியை ஆர்த்தி குமார், ஊழியர் கலாவதி ஆகியோர் கொடியேற்றினர். பள்ளி நிர்வாகி குமார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பாண்டிரெங்கசாமி, தலைமை ஆசிரியை கோமதிபாலா, ஆசிரியர்கள் இந்திராகாந்தி, கவிதா, ஜெசிஐ., தலைவர் பாலதண்டாயுதம், ஆசிரியைகள் ஜீவிதா, முத்துச்செல்வி, புவனேஸ்வரி பங்கேற்றனர்.* சிவகங்கை தாய் இல்லத்தில் நல்லாசிரியர் கண்ணப்பன் கொடியேற்றினார்.
வாசகர் வட்ட தலைவர் அன்புத்துரை முன்னிலை வகித்தார். தாய் இல்ல நிறுவனர் புஷ்பராஜ் வரவேற்றார். காப்பாளர் தனலட்சுமி நன்றி கூறினார். குழந்தைபாதுகாப்பு அலுவலர் ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* தமறாக்கி வடக்கு அரசு நடுநிலை பள்ளியில் ஊராட்சி தலைவர் ரவி கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் துர்காபாய் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் உமாராணி, குமரேசன், லதா, கிரிஜா, ரேவதி, சகாயடெய்சி பங்கேற்றனர். ஆசிரியர் மோகன் நன்றி கூறினார்.* நாலுகோட்டை ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஊராட்சி தலைவர் தலைவர் மணிகண்டன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியை தமிழ்ச் செல்வி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.* சிவகங்கை ஸ்ரீமகாத்மா நர்சரி பள்ளி, நம்பிக்கை மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் நலம் கிளினிக் நிர்வாகி பஷீர் அகமது கொடியேற்றினார்.
பள்ளி நிர்வாகி சரளாகணேஷ் தலைமை வகித்தார். ஆசிரியை கீர்த்தனா, சிறப்பு ஆசிரியர் அருண்கணேஷ் பங்கேற்றனர்.* சிவகங்கை 48 காலனி நகராட்சி நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியை மரியசெல்வி தலைமை வகித்தார். மாணவர்கள் கொடியேற்றினர். உதவி தலைமை ஆசிரியை சாந்தாபிரபா நன்றி கூறினார்.* சிவகங்கை கற்பூர சுந்தரபாண்டியன் ராமலட்சுமி மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் பொக்கிஷம் கொடியேற்றினார். ஆசிரியர், ஆசிரியை, மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.
சிவகங்கை 21 ம் நுாற்றாண்டு மேல்நிலை பள்ளியில் நிறுவனர் சுதர்சனநாச்சியப்பன், அறங்காவலர் ராணிசத்தியமூர்த்தி தலைமை வகித்தனர். பிளஸ் 1 மாணவர் ராகவா கொடியேற்றினார். முதல்வர் விவேகானந்தன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.* நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி., மகளிர் பள்ளியில் பள்ளி மேலாளர் சுப்பையா கொடியேற்றினார். தலைமை ஆசிரியை மகாலட்சுமி, ஆசிரியைகள் பங்கேற்றனர். கலெக்டரிடம் பரிசு பெற்ற மாணவிகள் சவுந்தர்யா, மீனாவை கவுரவித்தனர்.
மேலவாணியங்குடி ஏ.எஸ்.வி.ஏ., மெட்ரிக் பள்ளியில் தாளாளர் டாக்டர் அசோக்குமார் கொடியேற்றினார். முதல்வர் குமார் உட்பட ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.* சிவகங்கை எம்.பி., அலுவலகம் மற்றும் அரண்மனைவாசலில் காங்., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன் கொடியேற்றினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், தி.மு.க., நகர் செயலாளர் துரைஆனந்த், காங்., மாநில மகளிரணி துணை தலைவி ஸ்ரீவி்த்யா, சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலை யில் துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் ஆர்.சுவாமிநாதன் கொடியேற்றினார். பதிவாளர் சேகர், பொறுப்புகுழு உறுப்பினர்கள் கருப்புச்சாமி, குணசேகரன் உட்பட துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.* அரியக்குடி அரசு மேல்நிலை பள்ளியில் ஊராட்சிதலைவர் சுப்பையா கொடியேற்றினார். முன்னாள் ஊராட்சிதலைவர் தமிழ்மணி, முன்னாள் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், தலைமை ஆசிரியர் பிரிட்டோ பங்கேற்றனர். ஆசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார்.* சாக்கோட்டை ஒன்றியம் காயாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை சூரியசுந்தரி கொடியேற்றினார். உதவி தலைமை ஆசிரியை லீலா உட்பட ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.* எம்.பி., அலுவலகத்தில் கார்த்தி எம்.பி., கொடியேற்றினார்.* நகராட்சியில் கமிஷனர் லட்சுமணன் கொடியேற்றினார்.
டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., வினோஜி தலைமை வகித்தார். சிறப்பு எஸ்.ஐ., நேரு கொடியேற்றினார்.* காரைக்குடி ஆவின் அலுவலகத்தில் ஆவின் சேர்மன் அசோகன் கொடியேற்றினார்.* சாக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் சேர்மன் சரண்யா கொடியேற்றினார்.* கல்லல் யூனியன் அலுவலகத்தில் சேர்மன் சொர்ணம் கொடியேற்றினார்.* காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் பள்ளியில், முன்னாள் ராணுவ வீரர் கருணாநிதி தேசியக்கொடி ஏற்றினார். பள்ளி தாளாளர் சத்தியன், முதல்வர் விஜித்கிருஷ்ணா, துணை முதல்வர் உமாமகேஸ்வரி கலந்து கொண்டனர்.* ஸ்ரீ ராஜராஜன் கல்வி குழுமத்தில் நடந்த குடியரசு தின விழாவில், அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, பள்ளி முதல்வர் வாசுகி, கல்லூரி முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் மகாலிங்கசுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கமாண்டன்ட் கிளாரே தேசியக்கொடியை ஏற்றினார்.* காரைக்குடி நேஷனல் கேட்டரிங் அண்டு பயர் அண்டு சேப்டி கல்லூரியில் கல்லூரி தாளாளர் சையது தலைமையில், கல்விக் குழும இயக்குனர் மனோகர் முன்னிலையில், காஸ்மாஸ் சங்க முன்னாள் தலைவர் ராமநாதன் கொடியேற்றினார்.
காரைக்குடி அழகப்பா கல்விக்குழமத் தலைவர் ராமநாதன் வைரவன் தலைமையில், அழகப்பா மெட்ரிக் பள்ளியில் பள்ளி முதல்வர் பிராங்கிளின் கொடியேற்றினார்.* அழகப்பா அகாடமியில் முதல்வர் சிவக்குமார் கொடியேற்றினார்.* அழகப்பா பெண்கள் பள்ளியின் முதல்வர் பாரதி கொடியேற்றினார்.* அழகப்ப பிரைமரி பள்ளியில் கோமதி நாச்சியார், அழகப்பா மாண்டிசோரி பள்ளியில் தேவகி கொடியேற்றினர்.* டாக்டர்.உமையாள் ராமநாதன் கல்லூரியில் முதல்வர் ஜெயஸ்ரீ கொடியேற்றினார்.* அழகப்பா நர்சிங் கல்லூரியில் முதல்வர் ஜூலியட் சில்வியா கொடியேற்றினார்.* காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் சேதுராமன்,அஜய் யுக்தேஸ் தலைமையில். உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தன் கொடியேற்றினார்.* மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் தாளாளர் குமரேசன், அருண்குமார் தலைமையில் பள்ளி முதல்வர் உஷாகுமாரி கொடியேற்றினார்.* காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளியில் பள்ளி முதல்வர் ஹேமாமாலினி கொடியேற்றினார்.* புதுவயல் ஸ்ரீ வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முதல்வர் குமார் கொடியேற்றினார்.* கிட் அன்ட் கிம் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில், தலைவர் அய்யப்பன் கொடியேற்றினார்.
ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் சாவித்திரி தலைமையில், பள்ளி மேலாண்மை குழுத்தலைவி தெய்வானை கொடியேற்றினர். பள்ளி உதவி ஆசிரியை சகாய அற்புதமேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.* கார்த்திகேயன் பள்ளி யில் தலைமையாசிரியர் சுவேதா தலைமையில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சி.டி. மணிகண்டன் தேசியக் கொடியை ஏற்றினார்.திருப்புத்துார்* திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் சாந்தி கொடியேற்றினார்.
டாக்டர்கள் சண்முகப்பிரியா, மலையரசி, முத்துக்குமார், கீதாஞ்சலி, தலைமைச் செவிலியர் தனலெட்சுமி, உதவியாளர் மீரான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.* திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தலைவர் சண்முகவடிவேலு கொடியேற்றினார். ஆணையாளர் தென்னரசு முன்னிலை வகித்தார்.ஒன்றியக் கவுன்சிலர்கள்,அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.* விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் முதல்வர் சசிக்குமார் கொடியேற்றினார். பேராசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
திருப்புத்துார் ஆறுமுகம்பிள்ளை சீதைஅம்மாள் கல்லுாரியில் முதல்வர் கேப்டன் ஜெயக்குமார் கொடியேற்றினார். பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.* திருப்புத்துார் ஆறுமுகம்பிள்ளை சீதைஅம்மாள் கல்வியியல் கல்லுாரியில் தாளாளர் ராமேஸ்வரன் கொடியேற்றினார். முதல்வர் ஜெகதீசன் வரவேற்றார். பேராசிரியர்கள் பங்கேற்றனர்.* அல் அமிர் கல்வியியல் கல்லுாரியில் கல்விக்குழும பொருளாளர் ரெமி கொடியேற்றினார். முதல்வர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். பேராசிரியர் இமாமுன் சகுபர் சாதிக்அலி வரவேற்றார். மாணவ ஆசிரியர்கள் இணைய வழியில் பேசினர். பேராசிரியை ஜெயப்பிரியா நன்றி கூறினார்.* திருப்புத்துார் ஆறுமுகம்பிள்ளை சீதைஅம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ராமேஸ்வரன் கொடியேற்றினார். முதல்வர் அமுதா வரவேற்றார்.
ஆசிரியர்கள் ஞானப்பூங்கோதை, சேவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் லியோ தலைவர் மாணவி ஹரிப்பிரியா கொடியேற்றினார். முதல்வர் தபஸ்ஸீம் கரீம் வரவேற்றார். தாளாளர் ரூபன் அறிமுகவுரையாற்றினார். லயன்ஸ் தலைவர் ரெங்க சாமி வாழ்த்தினார். கெளரவ விருந்தினராக குன்றக்குடி த.கு..அடிகள் கல்வியில் கல்லுாரி முதல்வர் மோகன்ராஜ் பங்கேற்றார். தொடர்ந்து மாணவர்கள் பட்டிமன்றம் பள்ளி தலைவர் விக்டர் தலைமையில் நடந்தது.* பாபா அமிர்பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் பாபா அமிர்பாதுஷா தலைமையேற்று கொடியேற்றினார். முதல்வர் கார்த்திகா வரவேற்றார். தமிழாசிரியர் அன்னகாமாட்சி சிறப்புரையாற்றினார்.
பொங்கல் போட்டியில் வென்று கலெக்டரிடம் பரிசு பெற்ற கபிலேந்திரன்,காவ்யா, ஷன்மதி ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். ஆசிரியை சந்தானலெட்சுமி நன்றி கூறினார். ஆசிரியர்கள் கெளரவப்படுத்தப்பட்டனர்.* தென்கரை மவுண்ட் சீயோன் பள்ளியில் தாளாளர் விவியன் தலைமை வகித்தார். இயக்குனர் ஜெய்சன் கொடியேற்றினார். முதல்வர் ஜோசப்சன் மகிபைராஜ் வரவேற்றார். இணைய வழியில் மாணவ, மாணவியர் பங்கேற்ற பேச்சு, கலைநிகழ்ச்சிகள் நடந்தன.* திருப்புத்துார் ஆ. பி.அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சந்திரன் அவர்கள் தலைமை வகித்து கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் (பொ) சிவசைலம் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* பி.எஸ்.ஆர்.கிரீன்பார்க் இன்டர்நேஷனல் பள்ளியில் கல்விக்குழும பொருளாளர் ரெமி தலைமை வகித்தார்.ஆசிரியை பெபின் வரவேற்றார். அல்அமிர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் சந்திரசேகர் கொடியேற்றினார். ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.* திருப்புத்தூர் லிம்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்விக் கழகத் தலைவர் சாக்ளா தலைமை வகித்தார்.
பெரிய பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தலைவர் முகமது இஸ்மாயில், செயலாளர் கான் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளர் காஜா முகையதீன் வரவேற்றார். திருப்பத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாமும், சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜியுமான முகமது பாருக் ஆலிம் தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். முதல்வர் ஆண்டனி சாமி விக்டர்,பள்ளிவாசல் துணைத் தலைவர்பாபா அமீர் பாதுஷா, துணைச் செயலாளர் அப்துல் சலாம், பள்ளி துணைச் செயலாளர் அப்துல் காதர், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். நிர்வாக அலுவலர் சர்க்கரை முகமது நன்றி கூறினார்.* ஆலம்பட்டி ஊ.ஒ. நடுநிலைப்பள்ளியில் தலைமையாசியர் ஸ்ரீதர் ராவ் வரவேற்றார். ஊராட்சி தலைவர் திலகவதி கொடியேற்றினார்.
முன்னாள் ஊராட்சி தலைவர் பாண்டியன், துணை தலைவர் ஆறுமுகம், ஆசிரியைகள் முத்துலட்சுமி, முனியம்மாள், ஜலஜா பங்கேற்றனர். துப்புரவு காவலர்கள் கெளரவப்படுத்தப்பட்டனர்.* கா.புதுவளவு ஊ.ஓ.தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் ஜோசுவா அசோக்குமார் வரவேற்றார். ஊராட்சித் தலைவர் செந்தமிழ்ச்செல்வி கொடியேற்றினார். மதியழகன், வார்டு உறுப்பினர்கள் போஸ்,செல்வி,ஆனந்தவள்ளி பங்கேற்றனர்.* திருப்புத்துார் அரசு மருதுபாண்டியர் நினைவகத்தில் வாரிசுதாரர் தலைவர் ராமசாமி கொடியேற்றினார்.
கோட்டாட்சியர் பிரபாகரன் மருதுபாண்டியர் நினைவகத்தில் சிலைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தாசில்தார் பஞ்சாபிகேசன், துணைத்தாசில்தார் செல்லத்துரை பங்கேற்றனர். பழனிக்குமார், லெனின் மருது, வீரையா வரவேற்றார்.* த.மு.மு.க. கிளை சார்பில் சமஸ்கான் பள்ளிவாசல் வளாகத்தில் மமக மாவட்ட விவசாய அணி செயலாளர் சமஸ்கான் கொடியேற்றினார். தமுமுக நகர் செயலாளர் ராஜாமுகம்மது, மமக நகர் செயலாளர் சர்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் அப்துல்லா தலைமை வகித்தார்.நகர வர்த்தக அணி செயலாளர். முகமதுஅலி, வர்த்தக அணி பொருளாளர் பசீர்முகமது, இளைஞரணி செயலாளர் சாதிக்பாட்ஷா, இளைஞரணி துணைச் செயலாளர் சையது அப்துல்காதிர், மருத்துவ சேவை அணி செயலாளர் நூர்முகமது,பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்றனர்.பெரியபள்ளியின் முன்னாள் செயலர் அப்துல்காதர் நன்றி தெரிவித்தார்.
மானாமதுரை*மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் லதா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.வி.எ.ஓ.க்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.*மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை தேசியக்கொடி ஏற்றி வைத்தார். ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் முத்துச்சாமி பி.டி.ஓ.,பர்ணபாஸ் அந்தோணி, மேலாளர் தவமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் கண்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தலைமை அலுவலர் கணேசன்,சுகாதார ஆய்வாளர் தங்கதுரை உள்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.*மானாமதுரை குட்வில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் பூமிநாதன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.*மானாமதுரை ஜெயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் கிருஷ்டிராஜ் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.*மானாமதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர் சரஸ்வதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.செவிலிய கண்காணிப்பாளர்கள் சொரூபராணி, பிரிசில்லா உட்பட செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.*மிளகனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தலைமையாசிரியர் சேவியர் ஆரோக்கியதாஸ்,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சண்முகவேல் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.*மானாமதுரை அருகே உள்ள தெ. புதுக்கோட்டை எம்.கே.என்., நடுநிலைப்பள்ளியில் நிர்வாக கமிட்டி தலைவர் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தாளாளர் அன்பழகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி, தலைமையாசிரியர் சிவகுருநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.*மானாமதுரை மண்பாண்டம் கூட்டுறவு சங்கத்தில் தலைவர் லட்சுமணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.*கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேஸ்வரி கொடி ஏற்றி வைத்தார் தலைமையாசிரியர் விங்ஸ்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இளையான்குடி*இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் முனியாண்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.பி.டி.ஓ.,முத்துக்குமார், மேலாளர் இளங்கோ,துணைத்தலைவர் தனலட்சுமி உள்பட ஒன்றிய கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.*இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆனந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.*இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கோபிநாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.தலைமை அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.*இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில் சோதுகுடி பிரித்திவிராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முதல்வர் அப்பாஸ் மந்திரி,தலைவர் அப்துல்அஹது, செயலாளர் ஜபருல்லா கான்,துணை முதல்வர் ஜஹாங்கீர் உட்பட பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.சிங்கம்புணரி* சிங்கம்புணரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி சதத்து நிஷா கொடியேற்றினார்.* சிங்கம்புணரி தீயணைப்பு அலுவலகத்தில் நிலைய அலுவலர் அருள்ராஜ் கொடியேற்றினார்.
சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவர் அய்யன்ராஜ் கொடியேற்றினார்.* பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் நிவேதா கொடியேற்றினார். டாக்டர் தென்றலன், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர்.* சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் திவ்யாபிரபு கொடியேற்றினார். துணைத்தலைவர் சரண்யா, ஆணையாளர் லெட்சுமண ராஜூ, பி.டி.ஓ., பாலசுப்பிரமணியன், மேலாளர் அருள்பிரகாசம் பங்கேற்றனர்.* எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் விஜயாகுமரன் கொடியேற்றினார். துணைத்தலைவர் வீரம்மாள், ஆணையாளர் சந்திரா, பி.டி.ஓ., அங்கயற்கண்ணி, மேலாளர் ராஜசேகரன், கணக்கர் சேக் அப்துல்லா பங்கேற்றனர்.
சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ஜான்முகமது கொடியேற்றினார்.மல்லாகோட்டை ஊராட்சியில் தலைவர் விஜயா ராதாகிருஷ்ணன் கொடியேற்றினார். துணைத் தலைவர் கீதா பிரியா, செயலர் ருக்மணி பங்கேற்றனர்.* மருதிபட்டி ஊராட்சியில் தலைவர் வெண்ணிலா வெங்கடேஸ்வரன் கொடியேற்றினார். துணைத்தலைவர் கமலா, செயலர் அசோகன் பங்கேற்றனர்.* பிரான்மலை ஊராட்சியில் தலைவர் ராமசுப்பிரமணியன் கொடியேற்றினார். துணைத் தலைவர் ராஜாமணி, செயலர் பழனியப்பன் பங்கேற்றனர்.அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் தலைவர் சரவணன் கொடியேற்றினார். துணைத் தலைவர் ரகுமத்நிஷா, செயலர் வடிவேலன் பங்கேற்றனர்.* மதுராபுரி ஊராட்சியில் தலைவர் கருப்பையா கொடியேற்றினார். துணைத் தலைவர் பொன்விஜயன், செயலர் நல்லம்மாள் பங்கேற்றனர்.
எஸ்.செவல்பட்டி ஊராட்சியில் தலைவர் தேவதாஸ் கொடியேற்றினார். துணைத்தலைவர் மாஸ்கோமலர், செயலர் ரேணுகாதேவி பங்கேற்றனர்.* சிவபுரிபட்டி ஊராட்சியில் தலைவர் தமிழரசி கொடியேற்றினார். துணைத் தலைவர் அர்ச்சுனன், செயலர் ஆனந்தகுமார் பங்கேற்றனர்.* சதுர்வேதமங்கலம் ஊராட்சியில் தலைவர் கலைச்செல்வி சீனிவாசன் கொடியேற்றினார். துணை மின் பொறியாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* அ.காளாப்பூர் ஊராட்சியில் கிராம அம்பலகாரர் பார்த்திபன் தலைமையில் ஊராட்சி தலைவர் சுந்தம்மாள் கொடியேற்றினார். துணைத்தலைவர் விஜய், செயலர் ரமேஷ் பங்கேற்றனர்.
கண்ணமங்கலப்பட்டி ஊராட்சியில் தலைவர் செம்மலர் கொடியேற்றினார். துணைத்தலைவர் ஜெயசுந்தரி, செயலர் ஆனந்தகுமார் பங்கேற்றனர்.* ஜெயங்கொண்ட நிலை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜ் கொடியேற்றினார். துணைத்தலைவர் சிகப்பாயி பங்கேற்றனர்.* கல்லம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மெய்யப்பன் கொடியேற்றினார்.
துணைத்தலைவர் பழனிச் சாமி, செயலர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.* மு.சூரக்குடி ஊராட்சி யில் ஊராட்சித் தலைவர் ஜெயமணி செல்லையா கொடியேற்றினார். துணைத்தலைவர் சந்திரா, செயலர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* வகுத்தெழுவன்பட்டி ஊராட்சியில் தலைவர் கஸ்தூரி சுந்தரராசு கொடியேற்றினார். துணைத் தலைவர் சேகர் பங்கேற்றனர்.