'இனிக்கும்' மலைவேம்பு சாகுபடி; விவசாயிகள் ஆர்வம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
04:59

பொள்ளாச்சி-பொள்ளாச்சி பகுதியில் நிரந்தர சாகுபடி செய்யாத நிலங்களில், மலைவேம்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.மலைவேம்பு என்பது, இந்தியாவை தாயகமாக கொண்ட, பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும், விரைவில் வளர்ந்து பலன் கொடுக்கும் மர வகையாகும். பிளைவுட், காகித கூழ், தீக்குச்சி என பல்வேறு தொழிற்சாலை பயன்பாடுகளுக்கு மலைவேம்பு மரம் மூலப்பொருளாக இருப்பதால், நிலையான விலை கிடைக்கிறது.ஒரு ஏக்கரில், அடர் நடவு முறையில், 1,200 மரக்கன்றுகள் வரை நடவு செய்யலாம். இதில், பாதி மரங்களை அதாவது, 600 மரங்களை நான்கு ஆண்டுகளுக்குள் தீக்குச்சி, எரிபொருள், பேப்பர் கூழ் தயாரிக்கும் பயன்பாட்டுக்கு விற்பனை செய்யலாம். ஒரு மரம் குறைந்தது, ஆயிரம் ரூபாய் விலை போகும்.மீதமுள்ள மரங்களில் பாதியை, அதாவது, 300 மரங்களை எட்டு ஆண்டுகளில் அறுவடை செய்தால், ஒரு மரம், 6,000 ரூபாய் வரை விலை போகும். மீதமுள்ள, 300 மரங்களை, 12 ஆண்டுகளில் அறுவடை செய்தால், ஒரு மரம், 10 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது.இப்படி, நிரந்தரமாக பயிர் சாகுபடி செய்யாத நிலத்தில், மலைவேம்பை நடவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலும் மானாவாரியாகவும், சிலர் பாசன பயிராகவும் சாகுபடி செய்கின்றனர். மேலும், தொழில் வளாகங்கள், தோட்டத்தின் எல்லைப்பகுதிகள், வரப்புகளில் மலைவேம்பு சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது.தோட்டக்கலை உதவி இயக்குனர் வசுமதி கூறுகையில், ''மலைவேம்பு மரத்துக்கான தொழிற்சாலை தேவைகள் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் அதற்கான விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதில், தரமான கன்றுகளை கண்டறிந்து வாங்க வேண்டியது மிக முக்கியம்.இல்லையென்றால் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்காது. தரமான நாற்றுப் பண்ணைகளில், நல்ல முதிர்ந்த மரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகளை வாங்கி நடவு செய்தால், மற்ற மர வகைகளை விட குறுகிய காலத்தில் நல்ல வருவாய் கிடைக்கும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X