உரிய வழிகாட்டுதலுடன் குடியரசு தின விழா கோலாகலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
05:05

உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில், நாட்டின் 73-வது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களுடன் இனிப்புகள் வழங்கி, அனைவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், 73வது குடியரசு தின விழா நேற்று நடந்தது. சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் தேசியக்கொடியேற்றினார். கொடியேற்றும் போது, கொடியில் இருந்த நாடா அறுந்தது. அதனை சமாளித்து கட்டப்பட்டாலும் கொடி பறக்கவில்லை.பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் தாணுமூர்த்தி கொடியேற்றினார். கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய சித்தா மருந்தாளுனர் காமராஜ் மற்றும் ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுலகத்தில் நடந்த விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன் கொடியேற்றினார். பள்ளி துணை ஆய்வாளர், மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர். அலுவலக பணியாளர்களின் பணிகளை பாராட்டி, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கத்தில் நடந்த கொடியேற்ற விழாவில், சங்கத்தலைவர் துரை, பொருளாளர் கண்ணபிரான், மூத்த வக்கீல் செல்வராஜ், வக்கீல்கள் சாதிக் அலி, ரவி, செந்தில் மற்றும் பலர் பங்கேற்றனர்.பள்ளிகள்பொள்ளாச்சி எஸ்.பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஊராட்சி தலைவர் திலகவதி கொடியேற்றினார். பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப்பால் மாணிக்கராஜ் வரவேற்றார்.தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் காளிமுத்து, தொப்பம்பட்டி தொண்டு நிறுவன பிரதிநிதி ராமசேகர் கொடியேற்றினர். பள்ளி தலைமையாசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார்.பொள்ளாச்சி ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சித்தலைவர் தேவி கொடியேற்றினார். பள்ளி தலைமையாசிரியை சுகந்தி வரவேற்றார். அறிவியல் பட்டதாரி ஆசிரியை கீதா, தேக்கு, பப்பாளி விதை பந்துகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.பொள்ளாச்சி ஜமீன்முத்துார் ஏ.ஆர்.பி., இன்டர்நேஷனல் பள்ளியில், தாளாளர் சுப்ரமணியம் கொடியேற்றினார். பள்ளியின் முதல்வர் அரசு பெரியசாமி வரவேற்றார். பள்ளிச்செயலாளர் தமிழ்செல்வன், பள்ளியின் நிர்வாக அறங்காவலர்கள் மகேஷ்வரி, தங்கமணி, ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வி நன்றி கூறினார்.ஆனைமலை கிளை நுாலகத்தில் நுாலகர் மீனாகுமாரி வரவேற்றார். வாசகர் வட்டத்தலைவர் ராம்குமார், கொடியேற்றினார். துணை தலைவர் பேபிமணிகண்டன் நன்றி கூறினார். உறுப்பினர் சேர்க்கை, புரவலர் சேர்க்கை குறித்து விளக்கப்பட்டது.கல்லுாரிகள்சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில் முதல்வர் சோமு தலைமை வகித்தார். கல்லுாரியின் தலைவர் விஜயமோகன் கொடியேற்றினார். வணிகவியல் துறை தலைவர் சாந்தகுமாரி நன்றி கூறினார்.பொள்ளாச்சி என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் சார்பில், குடியரசு தின விழா, பழனிக்கவுண்டர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் அசோக் கொடியேற்றினார். மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி முதல்வர் ரத்தினவேலு, பேராசிரியர்கள், என்.சி.சி., அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.பொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை கல்லுாரியில் நடந்த விழாவில், ஆலோசகர் சுப்ரமணியன் கொடியேற்றினார். என்.ஜி.எம்., கல்லுாரியில் நடந்த விழாவில், முதல்வர் முத்துக்குமரன் கொடியேற்றினார். துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நாகராஜன் பேசினார். நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, விளையாட்டுகளில் சிறந்த மாணவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவில், ஹயக்ரீவா கல்வி நிறுவனங்களின் தலைவர் ரத்தினம் கொடியேற்றினார். செயலர் அருள்மொழி பேசினார். தாளாளர் மகேந்திரன், கல்லுாரி முதல்வர் கண்ணன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தில், சமூகநீதி தனித்தாசில்தார் ஜெயசித்ரா கொடியேற்றி மரியாதை செய்தார். துணை தாசில்தார்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.கிணத்துக்கடவு வடக்கு - கிழக்கு வட்டார காங்., சார்பில், வட்டாரத்தலைவர் ராதாகிருஷ்ணன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். வடசித்துார் வாலிபால் நண்பர்கள் சார்பில், ஊராட்சி மைதானம், மேட்டுக்கடை, கடைவீதி பகுதியில் இனிப்பு வழங்கப்பட்டது. நீர் நிலைகளில், பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனகராஜ் கொடியேற்றினார். தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.வால்பாறைவால்பாறை தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் குமார் கொடியேற்றினார். நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் சுரேஷ்குமார் கொடியேற்றினார். நகராட்சி சார்பில் காந்திசிலைக்கு மாலை அணிவிக்கபட்டது. விழாவில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வால்பாறை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கற்பகம் தேசியக்கொடியேற்றினார். மானம்பள்ளி வனச்சரக அலுவலகத்தில் வனச்சரக அலுவலர் மணிகண்டன் கொடியேற்றி, இனிப்பு வழங்கினார்.வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் குணசுந்தரி, கொடியேற்றினார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் கொடியேற்றினார். அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர்கள் கொடியேற்றினர்.உடுமலைஉடுமலை பாரதியார் நுாற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமையாசிரியர் சிவகுமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஆசிரியர் சின்னராசு, குடியரசு தினத்தின் சிறப்புகள், இந்திய அரசியலமைப்பின் பெருமைகள் குறித்து பேசினார். ஆசிரியர்கள் இனியன்ஞானப்பிரகாசம், விஜயலட்சுமி, ராஜேந்திரன், தைலியண்ணன், கெஜலட்சுமி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* உடுமலை கிளை நுாலகம் எண் 2ல், நுாலக வாசகர் வட்டம் மற்றும் முன்னார் ராணுவ வீரர்களுடன் இணைந்து, குடியரசு தின விழாக்கொண்டாடப்பட்டது. நுாலக வாசகர் வட்ட துணைத்தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். நுாலகர் கணேசன், வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, 1976ல், பணிபுரிந்த ராணுவ வீரர் சந்திரசேகர் பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி, கோவிந்தராஜ், நடராஜ், ஆசிரியர், விஜயலட்சுமி, நுாலகர்கள் மகேந்திரன், பிரமோத் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* ஆர்.கே.ஆர்., மேல்நிலைப் பள்ளியில், நடந்த விழாவில், தலைமையாசிரியர் கலிலுார்ரகுமான், தேசிய கொடி ஏற்றினார். ஆர்.கே.ஆர்., கல்வி குழுமங்களின் தலைவர் ராமசாமி, செயலர் கார்த்திக்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி முதல்வர் மாலா, தலைமை வகித்தார். ஆசிரியர் சியாமளா, தேசியக் கொடியை ஏற்றினார்.* ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் சாவித்ரி, வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சண்முகப்பிரியா முன்னிலை வகிக்க, ஊராட்சித் தலைவர் சுமதி, தேசியக் கொடியை ஏற்றினார். ஆசிரியர் கண்ணபிரான் நன்றி கூறினார்.* ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிச் செயலர் ராதாகிருஷ்ணன், கொடி ஏற்றினார். தலைமையாசிரியர் பூரணி, முன்னிலை வகிக்க, ஆசிரியர் புவனா வரவேற்றார். உதவி தலைமையாசிரியர் குமரேசன், வாசவி கிளப் தலைவர் சத்யநாராயணன், என்.சி.சி., அலுவலர் நாராயணன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த விழாவில், கல்லுாரி ஆலோசகர் மஞ்சுளா, தேசியக் கொடியை ஏற்றினார். கல்லுாரி முதல்வர் நாட்டுத்துரை, ஆசிரியர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* ஆர்.வேலுார் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில், ஊராட்சித் தலைவர் அன்னலட்சுமி, தேசியக் கொடியை ஏற்றினார். பள்ளித் தலைமையாசிரியர் கருணாநிதி, கிராம நிர்வாக அலுவலர் நாகமாணிக்கராஜ், ஊராட்சிச்செயலாளர் சஜித்தா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* உடுமலை போலீஸ் ஸ்டேஷன், வனச்சரக அலுவலகம் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா நடந்தது


- நிருபர் குழு -

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X