தொழிற்சாலைகளுக்கு சுகாதாரத்துறை  கட்டுப்பாடு! தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
05:16

பெ.நா.பாளையம்--கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொழிற்சாலைகளில் புதிய நடைமுறை விதிகளை அமல்படுத்த, பெரியநாயக்கன்பாளையம் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.



பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் வட்டாரங்களில் உள்ள தொழிற்சாலைகளில், தொற்று பரவலை தடுக்க, தமிழக அரசு அறிவித்துள்ள புதிய நடைமுறைகளை பின்பற்றும்படி, பெரியநாயக்கன்பாளையம் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.தொழிலாளர்கள்தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள் உள்ளே நுழையும்போது, அவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, இருமல், மூச்சு விடுதலில் சிரமம், உடல் வலி, வாசனை, சுவை அறியாமை உள்ளிட்ட அறிகுறிகளைக் கண்டறிய வேண்டும். உடல் வெப்பத்தை பரிசோதிக்க வேண்டும். குடும்பத்தினர், யாருக்காவது கடந்த ஒரு வாரத்தில் கோவிட் தொற்று ஏற்பட்டதா என, கேட்க வேண்டும்.கண்காணிப்புஅனைவரும் முகக்கவசத்தை முறையாக அணிவதை உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலை வளாகத்தில் கண்காணிப்பாளர் அல்லது மேலாளர் நியமனம் செய்யப்பட்டு, 'சிசிடிவி' கேமரா வாயிலாக, கண்காணிக்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு இடையே இரண்டு மீட்டர் இடைவெளி அவசியம் வேண்டும். இல்லாவிட்டால், கண்ணாடி தடுப்புகளை அமைக்க வேண்டும். தானியங்கி அல்லது கால்களால் இயக்கப்படும் கிருமி நாசினி 'சானிடைசர்'களை முக்கிய பகுதிகளில் வைக்க வேண்டும்.உணவு உண்ணுமிடம்உணவு உண்ணும் இடத்தில், 50 சதவீத நபர்கள் மட்டுமே, அனுமதித்தல் வேண்டும்.

அவர்கள் போதுமான, இடைவெளியில் அமர வேண்டும். உணவு உண்ணத் தொடங்கும் வரை, முகக்கவசம் கட்டாயம்.தொழிற்சாலையில் பணிபுரியும் அலுவலர்களை, வாகனங்களில் அழைத்துச் செல்லும் டிரைவர்களின் உடல் வெப்பநிலையை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.வாகனங்களில் போதுமான இடைவெளி விட்டு அமர வேண்டும். ஜன்னல்கள் திறந்து இருந்து, காற்றோட்டம் இருக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில், வாகனங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.தடுப்பூசி கட்டாயம்தொற்று இருப்பதற்கான அறிகுறி தெரியவந்தால், உடனடியாக அந்த தொழிலாளியை தனிமைப்படுத்த வேண்டும். அவர்களின் குடும்பத்தார் அனைவரும் கட்டாயம் இரண்டு 'டோஸ்' தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். தொழிற்சாலைகளில், 300 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தால், தொழிற்சாலையில் தகுதியான சுகாதார ஆய்வாளரை நியமனம் செய்ய வேண்டும்.தொற்று தடுப்பு குழுவை உருவாக்கி, அதில் மேலாளர்கள், மனித மேம்பாட்டு அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், சுகாதார ஆய்வாளர்களை இடம் பெற செய்ய வேண்டும்

.தொற்று குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும், என, சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.தொற்று தடுப்பு விதிமுறைகளை மீறிய தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதுவரை ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் மீறப்பட்டால், நடவடிக்கை கடுமையாக இருக்கும்.-வடிவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்,பெ.நா.பாளையம்

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X