அன்னுார்--அன்னுார் தாலுகாவில் நேற்று, 114 பேருக்கு தொற்று உறுதி ஆனது. சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், கோவில்பாளையம் பேரூராட்சியில், 28; இடிகரை பேரூராட்சியில் 6; கீரணத்தம் ஊராட்சியில், 12; கொண்டையம்பாளையத்தில் 7; அத்திப்பாளையத்தில் 3; வெள்ளமடையில் 2; வெள்ளானைப்பட்டி மற்றும் அக்ரஹார சாமக்குளத்தில் தலா ஒன்று என, 60 பேருக்கு தொற்று உறுதியானது. கோவில்பாளையம் பேரூராட்சியில், பாலாஜி நகர் மற்றும் டேங்க் வீதியில் 'சீல்' வைக்கப்பட்டு, நடமாட தடை விதிக்கப்பட்டது. அன்னுார் ஒன்றியத்தில், பேரூராட்சியில், 10 பேருக்கு; ஒட்டர்பாளையம், காட்டம்பட்டி, குன்னத்துார், வடக்கலுார் உள்ளிட்ட ஊராட்சிகளில், 44 பேருக்கு என, 54 பேருக்கு தொற்று உறுதியானது. அல்லிக்காரம்பாளையம், செந்துார் கார்டனில், 'சீல்' வைக்கப்பட்டு நடமாட தடை விதிக்கப்பட்டது.