நல்ல காலம் பொறந்தாச்சு! ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு சர்வதேச ஆர்டர்கள் வருகை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
05:42

கோவை-சர்வதேச அளவில் கொரோனா தொற்று விடை பெறும் சூழலில், ஜவுளி வர்த்தகம் தடையின்றி செயல்படத்துவங்கியதால், கோவையிலுள்ள ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு, புதிய தெம்பும் புத்துணர்வும் ஏற்பட்டுள்ளது.



சர்வதேச அளவில் 2020 ஜனவரியில், கொரோனா வைரஸ் பரவத்துவங்கியது. தொற்று பரவல் அதிகரித்து உயிரிழப்பு அதிகமானதால், ஊரடங்கே தீர்வு என்று அனைத்து நாடுகளும் பின்பற்றின.இதனால் சர்வதேச அளவில், சரக்கு போக்குவரத்து தடைபட்டது. 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்றழைக்கப்படும், கோவையில் ஜவுளி உற்பத்தியும் வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.

கொரோனாவிலிருந்து எப்படியும் மீள வேண்டும் என்று, நம் நாட்டில் மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு கைமேல் பலன் கிடைத்தது.முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருமிநாசினி பயன்பாடு போன்றவற்றால் மக்களிடமும் வர்த்தகர்களிடம், தொழிலாளர்களிடமும் நல்ல புரிதலும் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.இரு தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் ஆகியவை, நல்ல பாதுகாப்பு அரணாக உள்ளன. தொற்று பாதித்தவர்கள் விரைந்து குணமாகின்றனர். விழிப்போடும் பாதுகாப்போடும் மக்கள் இருந்து வருகின்றனர்.துவங்கியது போக்குவரத்துபல உலக நாடுகள் ஊரடங்கை, வாபஸ் பெற்றுக்கொண்டன. விமானங்களில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து துவங்கி விட்டன.சர்வதேச அளவில் ஜவுளி வர்த்தகம் மீண்டும் துவங்கியுள்ளது. உலக நாடுகள் மற்றும் நம் நாட்டிலும் மக்கள் ஆடை வகைகளை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். அதனால் ஆடைகளின் தேவை அதிகரித்து, வர்த்தகர்கள் ஆர்டர்களை கொடுக்கத்துவங்கியுள்ளனர்.இச்சூழலில், தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர், வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கிற்கான வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

தொற்று பரவல் மெல்ல குறையத் துவங்கியுள்ளதால், நாடு முழுவதும், ஊரடங்கு அறிவிப்புக்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது.இது குறித்து, தென்னிந்திய நுாற்பாலைகள் சங்கத்தலைவர் செல்வன் கூறியதாவது:பருத்தி மற்றும் நுால், ஒரு கேண்டி(356 கிலோ) 78,000 முதல் 80,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனாலும் நாங்கள் தொழில் உயிர்ப்புடன் இருப்பதற்காக பல சிரமங்களையும், நெருக்கடிகளையும் கடந்து, பஞ்சை கொள்முதல் செய்து, நுால் உற்பத்தி செய்து ஜவுளித்தொழிலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம்.

தற்போது சர்வதேச அளவில், ஜவுளி வர்த்தகம் துளிர்த்து உயிர் பிடித்துள்ளது. வர்த்தக விசாரணைகளும், ஆர்டர்களும் வரத்துவங்கியுள்ளன. மெல்ல இயல்பு நிலை திரும்பும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.இச்சூழலில், மத்திய ஜவுளித்துறை எங்களுக்கு சாதகமாக, இறக்குமதி பருத்தி மீதான 11 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும், பருத்தி மீது நடைபெறும் யூகபேர வர்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X