பெ.நா.பாளையம்-கவுண்டம்பாளையத்தில் தாசில்தாரின் கணவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கவுண்டம்பாளையம் பாலன் நகரில் வசிப்பவர் சர்மிளா, 48. பேரூர் தாசில்தாராக பணியாற்றுகிறார். இவரது கணவர் சபரீசன். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சபரீசன், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். மது குடிக்க முடியவில்லையே என, அடிக்கடி கூறிவந்தார்.நேற்று முன்தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். துடியலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.