கோவை-கோவை மாவட்ட மைய நுாலகத்தில், 73வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட மைய நுாலக நுாலகர் ராஜேந்திரன் வரவேற்றார். கோவை மாவட்ட நூலக ஆணைக்குழு அலுவலர் யுவராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, குடியரசு தினத்தின் முக்கியத்துவம் குறித்து ஊழியர்கள் மத்தியில் எடுத்து, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.இரண்டாம் நிலை நுாலகர் ரவிச்சந்திரன் மற்றும் நுாலக ஊழியர்கள் பங்கேற்றனர்.