கோவை-கோவையில் உள்ள பல்வேறு கல்லுாரிகளில், 73வது குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது.கோவை அரசு கலைக்கல்லுாரிகல்லுாரி முதல்வர் கலைசெல்வி தேசியக் கொடி ஏற்றி என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ''நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். இன்று நமக்குள்ள அத்தனை உரிமைகளையும், சுதந்திரத்தையும் பெற்றுத்தந்த தலைவர்களுக்கும், போராளிகளுக்கும் கடமைப்பட்டுள்ளோம்,'' என்றார்.விழாவில், என்.சி.சி., மற்றும் விளையாட்டு துறையில் தேசிய, உலக அளவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்கள், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரிஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தேசியக்கொடி ஏற்றினார். குடியரசு தினத்தின் சிறப்புகள் குறித்து அவர் பேசினார்.தொடர்ந்து, பெங்களூருவில் நடந்த குடியரசு தின அணிவகுப்புக்கான, தென் மாநில முகாமில் பங்கேற்ற என்.எஸ்.எஸ்., மாணவி பவ்யா, புதுச்சேரியில் நடந்த என்.சி.சி., மாணவர்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற மாணவர் பிரதீப் ஆகியோருக்கு, கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பிரகதீஸ்வரன், நாகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அவிநாசிலிங்கம் பல்கலைகோவை அவிநாசிலிங்கம் பல்கலையில், நடந்த குடியரசு தினவிழாவில் பல்கலை வேந்தர் தியாகராஜன், தேசியக் கொடி ஏற்றினார்.பல்கலை துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் பேசுகையில், ''பிரதமரின் தற்சார்பு கொள்கையால் பல்வேறு சிறப்புகள் கிடைத்துள்ளன. ஒவ்வொருவரும் தன்னிறைவு பெற்றவர்களாக வாழ வேண்டும்,'' என்றார்.ஸ்ரீ நாராயண குரு கல்லுாரிஸ்ரீ நாராயண குரு கல்லுாரியில் நடந்த குடியரசு தினவிழாவில், கல்லுாரி முதல்வர் இளங்கோவன், தேசியக் கொடி ஏற்றினார். கல்லுாரியின் என்.சி.சி., மாணவர்கள் வழங்கிய அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.