கோவை-சேவா பாரதி தென் தமிழ்நாடு(கோவை மாநகர் மாவட்டம்) சார்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வரும், 29ல் நடக்கிறது.
சேவா பாரதி தென் தமிழ்நாடு(கோவை மாநகர் மாவட்டம்) மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், பெண்களுக்கான மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், கிழக்கு வெங்கடசாமி ரோடு, சத்குரு சேவாஸ்ரமத்தில் வரும், 29ம் தேதி காலை, 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை முகாம் நடக்கிறது.'சேவா பாரதி' கவுரவ தலைவர் ராமநாதன் கூறியதாவது:இவ்விரு வகை புற்று நோயையும், ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதாகவும், முழுமையாகவும் குணப்படுத்தலாம். எனவே, திருமணமான பெண்கள் பயன்பெறும் வகையில் இந்த முகாம் நடக்கிறது. இம்முகாமில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிய, 'பேப்ஸ்மியர்' பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.நோய் கண்டறியும் பெண்கள், மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவர். முகாமில் பங்கேற்க, 98941 69794, 74022 53263 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். திருமணமான பெண்கள், இதனை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.