கோவை--குடியரசு தினவிழாவை முன்னிட்டு, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், வாகன பேரணி நடந்தது.கோவை பவர் ஹவுஸ் முதல் காந்திபுரம், திருவள்ளூவர் பஸ் ஸ்டாண்டு வரை இருசக்கர வாகன பேரணி நடந்தது. திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டு அருகே அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில், தேசிய கொடி ஏற்றினர்.திருவள்ளூவர் பஸ் ஸ்டாண்டு முன் ஒன்று சேர்ந்தவர்கள், பிப்., 23, 24ம் தேதிகளில் நடக்க உள்ள பொது வேலைநிறுத்த கோரிக்கைகளை முன்மொழிந்து, உறுதிமொழி எடுத்து கொண்டனர்.தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது, பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும், வருமான வரி செலுத்தும் அளவுக்கு, வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம், 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.'நாட்டை காப்போம், மக்களை காப்போம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம், விவசாயிகளைப் பாதுகாப்போம், தொழிலாளர்களை பாதுகாப்போம், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்போம்' என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.