அடுத்தடுத்து நகை பறிப்பு; அவிநாசி மக்கள் பீதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
06:19

அவிநாசி-அடுத்தடுத்த நாட்களில் நடந்த, இரண்டு செயின் பறிப்பு சம்பவத்தால், மக்கள் பீதியடைந்துள்ளனர். திருடப்பட்ட டூவீலரில் வந்து, மர்ம நபர்கள் கைவரிசை காண்பித்து சென்றது விசாரணையில் தெரிய வந்தது.அவிநாசி, அபிராமி கார்டன் பகுதியில் வசிப்பவர், ஜெயலட்சுமி, 34. அம்மாபாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். கடந்த, 24ம் தேதி இரவு பணி முடித்து, தனது சகோதரர் ராஜா, என்பவருடன் டூவீலரில் வந்து கொண்டிருந்தார்.இரவு 8.30 மணிக்கு, மடத்துப்பாளையம் பிரிவு பகுதியில் வந்த போது, அவர்களுக்கு பின், டூவீலரில் வந்த ஒருவர், ஜெயலட்சுமியின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து சென்றார். அதில், நிலைதடுமாறி, இருவரும் கீழே விழ, ஜெயலட்சுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.செயினை பறித்து சென்றவரின் டூவீலரின் எண்ணை கவனித்து சிலர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த டூவீலர் உரிமையாளர் அவிநாசி நியூ டவுன் பகுதியில் வசிக்கும் சுரேஷ், என்பது தெரியவந்தது.செயின் பறிப்பு நடத்த தினத்தன்று, அவரும், அவரது நண்பரும், ரங்கா நகர் 'டாஸ்மாக்' மதுக்கடை எதிர்புற ரோட்டில் தனது டூவீலரை நிறுத்தி விட்டு, கடைக்கு சென்று திரும்பிய போது, திருடப்பட்டிருப்பது தெரிந்தது. அவரிடமிருந்து திருடிய டூவீலரில் தான் மர்ம நபர் செயின் பறிப்பு செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.மற்றொரு திருட்டுஅனுப்பர்பாளையம், சத்யாநகர் பகுதியில் வசிப்பவர், சக்குபாய், 70. நேற்று முன்தினம், காலை, 11:00 மணிக்கு தனியார்மருத்துவமனைக்கு செல்ல, அவிநாசிலிங்கம்பாளையம் பஸ்ஸ்டாப்பில் இறங்கி, நடந்து சென்றார்.அவரை பின் தொடர்ந்து டூவீலரில் வந்த மர்மநபர், சக்குபாய் அணிந்திருந்த செயினை பறித்து தப்பினார்.இது குறித்தும், அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அடுத்தடுத்து அரங்கேறும் செயின் பறிப்பு நடந்தது, அவிநாசி பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X