திருப்பூர், இரண்டாவது ரயில்வே கேட் என்.ஆர்.கே., புரத்தை சேர்ந்தவர் சுரேந்தர், 21. அப்பகுதியில் 'டாஸ்மாக்' மதுக்கடை அருகே பெட்டி கடை நடத்தி வருகிறார். மதுபோதையில், திருப்பூர் கோல்டன் நகரை சேர்ந்த பாலா, 20 என்பவர், சிகரெட் வாங்க பெட்டி கடைக்கு சென்றார். கடைக்காரருடன், வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்து சென்ற பாலா, தனது நண்பர்களிடம்தெரிவித்தார். பெட்டி கடைக்கு சென்ற பாலாவின் நண்பர்கள், ஐந்து பேர், கடைக்காரருடன் தகராறு செய்தனர்.அவரை தாக்கியும், கடையில் இருந்த பொருட்களை உடைத்து கடையை சூறையாடினர். இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பூர் சூரியகாந்தி லே-அவுட்டை சேர்ந்த பூமிநாதன், 18, செல்வக்குமார், 20, கொடிக்கம்பத்தை சேர்ந்த குழந்தைவேல், 20, பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ், 20, பாலகிருஷ்ணன், 19 ஆகியோரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.