திருப்பூர்-திருப்பூரில் உள்ள பள்ளிகளில், 73வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.l திருப்பூர், ஆண்டிபாளையத்திலுள்ள அத்வைதா இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த விழாவுக்கு, பள்ளி தாளாளர் ரத்தின திவ்யாகுணசேகரன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் தேசியக்கொடி ஏற்றினார். அமைதியை வலியுறுத்தி சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டது. பள்ளி வளாகத்தில், சென்னையில் நடந்த குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் இணையவழியில் ஒளிபரப்பபட்டன. அதனை மாணவர்களும், பெற்றோர்களும் கண்டுகளித்தனர்.l திருப்பூர், அவிநாசி ரோடு, காந்திநகர், ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏ.வி.பி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளி ஆகிய இடங்களில் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தேசிய கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். பள்ளி பொருளாளர் லதா, பள்ளி முதல்வர்கள் டயானா, பிரமோதினி, பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் சக்திமிருதுளா, மோகனா, வனிதாமணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.l அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, பச்சாம்பாளையத்தில் உள்ள எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு, பள்ளி தாளாளர் ராதாமணி தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். பள்ளி முதல்வர், ஆசியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தேச தலைவர்களின் வேடமணிந்த மாணவர்களை, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.l திருப்பூர், பிரன்ட்லைன் மில்லேனியம் பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி தாளாளர் சிவசாமி தேசிய கொடியேற்றினார். ராணுவ வீரர் நலத்துறையில் பணிபுரிந்து வரும் நாகராஜன் இணையவழி மூலம் ராணுவத்தின் செயல்பாடு குறித்து பேசினார். பள்ளி செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் லாவண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.l திருப்பூர், பி.என்.ரோடு, ஸ்ரீநகர், விகாஸ் வித்யாலயா பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர்அனிதா தேசிய கொடியேற்றினார். பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி மற்றும் ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.l திருப்பூர், கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா தலைமை வகித்தனர். பள்ளி முதல்வர் அனிதா தேசிய கொடியேற்றினார். குடியரசு தினத்தின்நோக்கம், காரணம், லட்சியம் குறித்து மாணவர்கள் பேசினர்.l திருப்பூர், கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விவேகானந்தா சேவா அறக்கட்டளை தலைவர் பத்மகுமார் தேசியக்கொடியேற்றினார். இணைய வழியில் குடியரசு தின விழா உரை நிகழ்த்தப்பட்டது. பள்ளி துணை முதல்வர் சின்னையா வரவேற்றார். ஆசிரியர் உஷா நன்றி கூறினார்.l அவிநாசி, பழங்கரையில் உள்ள தி ஏர்னெஸ்ட் அகாடமி சீனியர் செகன்டரி பள்ளி முதல்வர் புவனேஸ்வரி தேசிய கொடி ஏற்றினார். பள்ளி இயக்குனர் டோரத்தி குடியரசு தினம் குறித்து சிறப்புரை ஆற்றினார். கலை நிகழ்ச்சிகள் இணையம் வழியாக வெளியிடப்பட்டது.l திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்---டீ ஆடை வடிவமைப்பு கல்லுாரியில், கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன்தேசியகொடியேற்றினார்; என்.சி.சி., மாணவர்கள், அணிவகுப்பு நடத்தினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.