திருப்பூர்-திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருப்பூர், சூசையாபுரத்தில் உள்ள விழுதுகள் வள மையத்தில் திட்ட மேலாளர் கோவிந்தராஜ் கொடியேற்றினார்; மையத்தில் பயிலும் சிறுவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடத்தி பரிசளிக்கப்பட்டது. யோகா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கள ஒருங்கிணைப்பாளர்கள் சுதா, வித்யா முன்னிலை வகித்தனர்.l திருப்பூர் மாநகர மாவட்ட காங்., சார்பில், குமரன் ரோடு, ராஜிவ்பவன் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தேசியக் கொடியேற்றினார். கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.l திருப்பூர் மாநகர் மாவட்ட த.மா.கா., சார்பில், காந்திநகரில் உள்ள மூப்பனார் பவனில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் கவுன்சிலர் ஜெயா முத்துசாமி தேசிய கொடியேற்றினார். மாநகர மாவட்ட துணைத்தலைவர் செழியன், பொது செயலாளர் தங்கமணி, மாணவரணி தீபக் மற்றும் மண்டல தலைவர், மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.l திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி.,லே -அவுட் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், நடந்த விழாவுக்கு, சங்க துணை தலைவர் அசோக்குமார், தலைமை வகித்தார். பொருளாளர் வடிவு வரவேற்றார். முன்னதாக சங்க தலைவர் துரை, தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.விழாவில், வாசகர் வட்டத் தலைவர் வெள்ளியங்கிரி, துணை செயலாளர் மகேஸ்வரி, துணை தலைவர் நிர்மலா, குட்டி கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.அவிநாசிl அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் ஆனந்தன், கொடியேற்றினார். துாய்மை பணியாளர்களுக்கு, காலை உணவு வழங்கப்பட்டது. துப்புரவு ஆய்வாளர் கருப்பசாமி மேற்பார்வையில், காமராஜ் நகரில் உள்ள ரிசர்வ் சைட்டில், 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. ஊர் பிரமுகர் மாரிமுத்து உள்ளிட்ட சிலர் பேரூராட்சி ஊழியர்களுடன் இணைந்து மரக்கன்று நட்டனர்.l அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ்த்துறை தலைவர் டாக்டர் மணிவண்ணன், கொடியேற்றினார். உடற்கல்வி இயக்குனர் பிரசன்னகுமார், அலுவலக ஊழியர் ராமலிங்கம், இரவு காவலர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.l அவிநாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. குற்றவியல் நீதித்துறை நடுவர் விபிசி தேசிய கொடியேற்றினார். வக்கீல் சங்க தலைவர் ஈஸ்வரன், துணை தலைவர் சாமிநாதன் முன்னிலை வகித்தனர். வக்கீல் சங்க முன்னாள் தலைவர்கள் சின்னசாமி, சண்முகானந்தம், பொன்னுசாமி, கனகராஜ், இளவரசு, முன்னாள் செயலாளர் செல்வராஜ் மற்றும் கோர்ட் ஊழியர்கள் பங்கேற்றனர்.l பழங்கரை ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி மன்ற தலைவர் கோமதி, கொடியேற்றினார். மன்ற உறுப்பினர்கள் சண்முகம், கவுரீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.---பொங்கலுார்l பொங்கலுார் அருகே தேவனம்பாளையம் சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், செயலாளர் சிவக்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. தேசத்தலைவர்கள் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.துணை பொருளாளர் தமிழரசன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், பிரவீன், கவுதம், தங்கராசு, கார்த்திகேயன், ஹரி உட்பட பலர் பங்கேற்றனர்.l பொங்கலுார் அருகே பொல்லிக்காளிபாளையம் அரசு துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் மனோகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.l பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை மதினாபேகம் தலைமையில் விழா நடந்தது. பி.டி.ஏ., தலைவர் ராஜேந்திரன் தேசிய கொடி ஏற்றினார். முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரத்தினசாமி, விஷன் ரோட்டரி நிர்வாகி பொன்னுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.l மாதப்பூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் அசோக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.''குடியரசு தினம், மக்களாட்சியை குறிக்கிறது. உழைக்காமலோ, வலிக்காமலோ வெற்றி சாத்தியமாகாது. தேசத்தின் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரது உழைப்பும் அவசியமானது. இதற்கு சபதம் மேற்கொள்வோம்'' என்றனர், குடியரசு தின விழாவில் பங்கேற்ற மக்கள்.