திருப்பூர்-திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாபு, 24 ம் தேதி, இரவு ரோந்து பணியில் இருந்தார்.கடந்த, 24ம் தேதி, கண்காணிப்பு பணியில் இருந்த போது, சிக்கண்ணா கல்லுாரி, சவுடாம்பிகை திருமண மண்டபம் அருகே, ரோடு விபத்து ஏற்பட்டது.அப்போது, அங்கிருந்த சிலர், காயமடைந்தவர்களை மீட்டு, வாகனம் மூலமாக, மருத்துவமனை அனுப்பி வைத்தனர். விபத்து நேரத்தில் உதவிய நபர்களை அழைத்து, போலீஸ் கமிஷனர் நேற்று நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி, பாராட்டினார்.அதேபோல், பஸ் ஸ்டாண்டில் தவறவிட்ட பணப்பையை, சரவணன் என்பவர் எடுத்து,உரிய நபரிடம் ஒப்படைத்தார். போலீஸ் கமிஷனர் நேற்று, சரவணனை அழைத்து பாராட்டினார்.