திருப்பூர்-திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று புதியதாக மேலும், 1,787 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து இதுவரை, ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 980 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.குணமடைந்தோர் எண்ணிக்கை குறைந்து நேற்று, 811 ஆனது. இதுவரை மாவட்டத்தில், ஒரு லட்சத்து, 4,025 பேர் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை இல்லாத வகையில், தினசரி பாதிப்பு, 1,700ஐ கடந்துள்ளதால், நேற்று முன்தினம், 7 ஆயிரமாக இருந்த சிகச்சை பெறுவோரின் எண்ணிக்கை, நேற்றிரவு, 8,918 ஆக உயர்ந்துள்ளது.திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 75 வயது ஆண், உடுமலை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 73 வயது ஆண்டு என இருவர் நேற்று சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதுவரை, 1,037 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்தாண்டு மே மாத இறுதியில், திருப்பூர் மாவட்ட கொரோனா தினசரி பாதிப்பு, 1,700 முதல், 2 ஆயிரமாக உயர்ந்தது. தற்போது, எட்டு மாதங்களுக்கு பின் தினசரி பாதிப்பு, 1,787 ஆக நேற்று பதிவானது குறிப்பிடத்தக்கது.