பந்தலுார்-பந்தலுார் அரசு மேல்நிலைப்பள்ளி சாலையோரம் உள்ளதால், மாணவர்கள் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இதனை தவிர்க்கும் வகையில், சாலையின் இரண்டு பகுதியிலும் தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக இப்பகுதியை சேர்ந்த முன்னாள் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார் தனது சொந்த செலவில் தடுப்புகளை வழங்கினார்.இதனை சாலையில் வைக்கும் நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி, சப்--இன்ஸ்பெக்டர் யாதவ கிருஷ்ணன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, செயலாளர் சிவசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.