ஊட்டி- -ஊட்டியில், 73வது குடியரசு தின விழா எளிமையாக நடந்தது.ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில், 73வது குடியரசு தின நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தேசிய கொடியேற்றி துவக்கி வைத்தார். போலீசாரின் அணிவகுப்பு நடந்தது. பின், அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 94 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.கொரோனா காலகட்டம் என்பதால், பழங்குடியினர் கலை நிகழ்ச்சி மட்டும் நடத்தப்பட்டு, எளிமையாக விழாவை நிறைவு செய்தனர்.* ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லுாரியில் நடந்த குடியரசு நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் சுஜாதா வரவேற்றார். செயலாளர் மோத்திலால் கட்டாரியா தலைமை வகித்து கொடியேற்றினார்.* இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் சார்பில், ஊட்டியில் சங்க அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ரெட்கிராஸ் சேர்மன் மணி தலைமை வகித்து கொடியேற்றினார். செயலாளர் மோரிஸ் சாந்த குரூஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.* குன்னுார் அருகே, சோகத்தொரையில், ஊர் தலைவர் ஆல்தொரை கொடியேற்றினார். ஊர் பிரமுகர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாணவர்கள் நடனம் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.* அருவங்காடு ஒசட்டி நிகழ்ச்சியில், மாணவ, மாணவியருக்கு கட்டுரை உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பு சார்பில், தேசிய கொடியேற்றப்பட்டது. அருவங்காடு, உதயம் நகர் சமத்துவ மக்கள் நலசங்கம் சார்பில், தலைவர் பாலகிருஷ்ணன் தேசிய கொடியேற்றினார்.* குன்னுார் நகராட்சி அலுவலகத்தில், கடந்த, 2 ஆண்டுகளாக துப்புரவு தொழிலாளர்கள் கொடியேற்றிய நிலையில், நேற்று கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார். அரசு மருத்துவமனையில் தேசிய கொடி ஏற்றப்பட்ட போது சிக்கி கொண்டதால், இறக்கப்பட்டு மீண்டும் சரி செய்து ஏற்றப்பட்டது.* பந்தலுார் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், வியாபாரிகள் சங்க தலைவர் அஸ்ரப் தேசிய கொடி ஏற்றி வைத்தார். செயலாளர் ஆண்டனி, பொருளாளர் காளிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் துணை தலைவர் ராஜ்குமார் கொடி ஏற்றினார். நிர்வாக இயக்குனர் செங்குட்டவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.தாசில்தார் அலுவலகத்தில், தாசில்தார் நடேசன் கொடி ஏற்றினார். ஊழியர்கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.* கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் காயத்ரி; பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மணிகண்டன்; நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் உதவி கோட்ட பொறியாளர் கணேசன், போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் கொடியேற்றனர்.* கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகம் அலுவலகத்தில், ரேஞ்சர் செல்வகுமார் கொடியேற்றினார். தொடர்ந்து, குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின் போது, மீட்பு பணியில் பங்கேற்ற வனக்காப்பாளர் நாகேஷ் என்பவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.