குன்னுார்---குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரி பகுதியில் நேற்று, 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில், நம் நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.சமீபத்தில், டில்லி உட்பட பல்வேறு இடங்களுக்கும், 'இன்டஸ்ட்ரியல் டிரிப்' சென்று திரும்பிய இவர்களுக்கு பரிசோதனை செய்ததில், கடந்த 22ம் தேதி, 101 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்களின் தொடர்பில் இருந்த பணியாளர்கள், குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, கடந்த சில நாட்களில், 28 பேருக்கு தொற்று ஏற்பட்டு,தனிமைபடுத்தப்பட்டனர். நேற்று, 29 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதுவரை வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி பகுதிகளில், மொத்தம், 158 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.