திருப்பூர்,-தாய் மண்ணின் புகழை பறைசாற்றும் வகையில், திருப்பூரில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த குடியரசு தின விழாவில், 55 போலீசாருக்கு, முதல்வர் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது; 73 பயனாளிகளுக்கு, 5.86 கோடி ரூபாய் நல உதவி வழங்கப்பட்டது.நாட்டின், 73வது குடியரசு தின விழா, திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கலெக்டர் வினீத், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கலெக்டர்,எஸ்.பி., ஆகியோர், திறந்தவெளி ஜீப்பில் சென்று, போலீஸ் படை அணிவகுப்பை பார்வையிட்டு, கொடிமேடைக்கு திரும்பினர்.
ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில், மூன்று 'பிளாட்டூன் கமாண்டர்' படையினர், 'பேண்டு வாத்திய குழு, 'ேஹாம்கார்டு', தமிழ்நாடு 'டிராபிக் வார்டன்' குழுவினர், ஆயுதப்படை வீரர்கள் அடங்கிய படையினர், மிடுக்குடன் அணிவகுத்தனர்.சமாதானத்தை வலியுறுத்தி, வெள்ளை புறாக்கள் பறக்க விடப்பட்டன. மூவர்ண பலுான்கள் பறக்க விடப்பட்டன.சிறப்பாக பணியாற்றிய போலீசார், அரசு அலுவலர்கள், கொரோனா முன்கள பணியாளருக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கி, கலெக்டர் கவுரவித்தார். முன்னதாக, முதல்வர் பதக்கம் பெற்ற, மாநகரம் மற்றும் மாவட்ட போலீசாருக்கு, பதக்கம் அணிவித்து கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.மாநகராட்சி போலீஸ் கமிஷனர் பாபு, எஸ்.பி., செஷாங்சாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.55 பேருக்குமுதல்வர் பதக்கம்மாநகர காவல்துறையில், நுண்ணறிவு பிரிவை சேர்ந்த கணேஷ்குமார், செந்தில்குமார், பிரபு உட்பட, 19 தலைமைக்காவலர் நிலை போலீசார், மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் 36 போலீசாருக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய வகையில், மாவட்ட போலீசில், 35 பேர்; மாநகர போலீசில், 33 பேர் என 68 போலீசாருக்கு, பாராட்டுச்சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.ரூ.5.86 கோடியில்நலத்திட்ட உதவிகுடியரசு தினவிழாவின் ஒரு பகுதியாக, சமூக பாதுகாப்பு திட்டம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, தாட்கோ, முன்னாள் படைவீரர் நலத் துறை உட்பட, அரசுத்துறைகள் சார்பில் நலஉதவி வழங்கப்பட்டது. மொத்தம், 73 பயனாளி களுக்கு, 5.86 கோடி ரூபாய் மதிப்பிலான நல உதவி வழங்கப்பட்டது.குடியரசு தின விழாவில் பங்கேற்றோர் பலர், 'நம் தேசத்தின் கனவுகளை நனவாக்கும் புது வேகத்துடன் செயல்படுவோம்' என்று தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினர்.பாராட்டுச்சான்றிதழ்வருவாய்த்துறையில், அவிநாசி தாசில்தார் ராகவி, பல்லடம் தாசில்தார் தேவராஜ் உட்பட துணை தாசில்தார், சார் ஆய்வாளர் உட்பட, 13 பேர்; ஊரக வளர்ச்சித்துறையில், துணை பி.டி.ஓ.. பணி மேற்பார்வையாளர் என, நான்கு பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 16 பேர்; தீயணைப்புத்துறையில், 19 பேர்; மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், பொது சுகாதாரம் உட்பட, 20 அரசுத்துறைகளில் பணியாற்றும், 216 பேருக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.பேரிடர் கால சேவைமின்வாரிய பிரிவில், பல்லடம் உதவி செயற்பொறியாளர் கருணாம்பிகை, வெள்ளகோவில் உதவி செயற்பொறியாளர் இளங்கோவன்; திருப்பூர் நகரம் (கிழக்கு) உதவி பொறியாளர் வினோத், அவிநாசி நம்பியாம்பாளையம் உதவி பொறியாளர் நடராஜ் ஆகியோர், பேரிடர் காலத்தில் சிறப்பாக சேவையாற்றியதற்காக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.மருத்துவர்களுக்கு கவுரவம்திருப்பூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில், இணை இயக்குனர் பிரேமலதா,தாராபுரம் அரசு மருத்துவமனை டாக்டர் நவநீதன்;உடுமலை டாக்டர் மகேஷ் மாரிமுத்து; அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், டாக்டர் துவாரகேஷ், செவிலியர் ராமுத்தாய், பேபி உள்ளிட்டோர், கொரோனா பணியை சிறப்பாக செய்ததற்காக பாராட்டப்பட்டனர்.
ஒருங்கிணைப்பு சிறப்புகுடியரசு தினவிழா நிகழ்ச்சிகளை, அய்யன்காளிபாளையம் தமிழ் ஆசிரியர் சண்முகசுந்தரம்; வீரபாண்டி பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி, பெருமாநல்லுார் தாவரவியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர், ஒருங்கிணைத்து நடத்தினர்.