புதுச்சேரி-காய்கறி கடையில் மேற்கூரையை பிரிந்து பணம் திருடிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அரவிந்தகுமார்,23. இ.சி.ஆரில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.கடந்த 24ம் தேதி இரவு வியாபாரம் முடிந்து, கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்தபோது மேசையில் வைத்திருந்த 2,500 ரூபாய் ரொக்கம், மொபைல் சார்ஜர் திருடு போனது தெரிய வந்தது.புகாரின்பேரில் லாஸ்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிந்து விசாரித்தார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கடையில் திருடியது கோவிந்தசாலையை சேர்ந்த சஞ்சய்குமார், 19, ஸ்டிக்கர் மணி, 21, என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.