புதுச்சேரி-காலாப்பட்டு மத்திய சிறையில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. சிறைத்துறை ஐ.ஜி., ரவிதீப்சிங் சாகர் தேசியக்கொடி ஏற்றி வைத்து, சிறை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.கைதிகள் யோகா மற்றும் சிலம்பம் சாகசம் செய்தனர்.குடியரசு தின விழாவையொட்டி சிறையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கைதிகள், காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை கண்காணிப்பாளர் அசோகன், கண்காணிப்பாளர் பாஸ்கரன் கலந்து கொண்டனர். கைதிகளுக்கு சிறப்பு உணவு, இனிப்பு வழங்கப்பட்டது.