அரியாங்குப்பம்-புதுக்குப்பம் கடற்கறரையில் அரிய வகை ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.தவளக்குப்பம் அருகே புதுக்குப்பம் கடற்கரையில் நேற்று மாலை அரிய வகை ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த வனத்துறையினர் சென்று பார்வையிட்டு, விசாரணை செய்தனர்.வனத்துறையினர் கூறுகையில், இந்த ஆமை, 'ஆலிவ் ரெட்லி' என்ற வகையை சேர்ந்தது. இனப்பெருக்கத்திற்காக கடற்கரைக்கு வந்து செல்லும். அப்போது பெரிய படகுகளில் அடிபட்டு இறப்பது உண்டு என்றனர்.