புதுச்சேரி-புதுச்சேரி குடியரசு தின விழாவில், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு கவர்னர் தமிழிசை விருது வழங்கி கவுரவித்தார். விருது பெற்றோர் விபரம் வருமாறு:ஜனாதிபதி காவல் பதக்கம்புதுச்சேரி எஸ்.பி., மோகன்குமாரின் 28 ஆண்டு கால பணியை பாராட்டி, ஜனாதிபதியின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. இவர், காவல் துறையில் 6 நற்சான்றிதழ்கள், 10 பாராட்டு சான்றிதழ்கள் பெற்றுள்ளார்.பி.என்.எல்., நிதி நிறுவனம் பொது மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் கையாடல் செய்தவழக்கில் சிறப்பாக பணியாற்றி, குற்றப்பத்திரி்கை தாக்கல் செய்ய புலனாய்வு அதிகாரிக்கு உதவியாக இருந்தார்.காவல் துறையில் 9 நற்சான்றிதழ்கள், 2 பாராட்டு சான்றிதழ் பெற்ற தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், 8 ரொக்க சான்றிதழ், 21 நற்சான்றிதழ்கள், ஒரு ராஜிவ் சான்றிதழ் பெற்ற ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் சுதர்சனன் ஆகியோரின் பணியை பாராட்டி ஜனாதிபதியின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது.உள்துறை அமைச்சர் பதக்கம் மிகச்சிறந்த காவலர் பயிற்சி பயிற்றுனருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. 2019-20ம் ஆண்டிற்கான இவ்விருது, காவலர் பயிற்சி பள்ளி பயிற்றுநர் ஏழுமலைக்கு வழங்கப்பட்டது.கவர்னரின் காவல் பதக்கம் காரைக்கால் நிரவி சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ், புதுச்சேரி பி.சி.ஆர்., செல் சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, சிக்மா செக்யூரிட்டி உதவி சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோரின் சிறப்பான பணியை பாராட்டி கவர்னரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது.பாராட்டு சான்றிதழ் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டுதல், குற்றங்களை கண்டுபிடித்தல், புலனாய்வு, பொதுமக்கள் நல்லுறவு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் காவலர்களுக்கு கவர்னரின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.இச்சான்றிதழ், காவல் துறை மத்திய கட்டுப்பாட்டு அறை உதவி சப் இன்ஸ்பெக்டர் சுப்ராய நாயுடு, ஏனாம் உதவி சப் இன்ஸ்பெக்டர் ரேக்கடி நாககேஷ்வர ராவ்,வில்லியனுார் உதவி சப் இன்ஸ்பெக்டர் நளினி, ஏனாம் கடலோர காவல் படை ஏட்டு சுப்ரமணியேஸ்வர ராவ், ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷன் காவலர் தாரகேஷ்வரி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.நினைவுப் பரிசு2021-22 கல்வியாண்டு புதுச்சேரி பிராந்திய அளவில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் அட்டவணை இன மாணவர்களுக்கான அம்பேத்கர் நினைவுப் பரிசு, லாஸ்பேட்டை குளூனி பள்ளி மாணவி ஹரினி, வாணரப்பேட்டை அமலோற்பவம் பள்ளி மாணவர் அகத்தியன் ஆகியோருக்குவழங்கப்பட்டது.அவர்களுக்கு ரொக்க பரிசாக 30 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது.தனி நபர் விருது மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பானசேவை செய்யும் தனி நபருக்கு, சமூக நலத் துறையால் வழங்கப்படும் விருதினை,நெல்லித்தோப்பை சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன் பெற்றார்.