பூட்டிய மதுக்கடையை உடைத்து மதுபாட்டில் திருடிய சிறுவர்கள் கைது | செய்திகள் | Dinamalar
பூட்டிய மதுக்கடையை உடைத்து மதுபாட்டில் திருடிய சிறுவர்கள் கைது
Added : ஜன 27, 2022 | |
Advertisement
 

காரைக்கால் -காரைக்காலில் கலால் துறையால் பூட்டப்பட்ட மதுக்கடை கதவை உடைத்து, மதுபாட்டில்கள் திருடிய இரு சிறுவர்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் திருபட்டினம் தொகுதி, வாஞ்சூர் பகுதியில் தனியார் மதுபானக் கடை உள்ளது.திருபட்டினத்தை சேர்ந்த செல்வராஜ், சிவகாளிமுத்து, ராதாகிருஷ்ணனின் மகன்கள் அஜேஸ்ராம், மாதேஸ்ராம் ஆகியோர் நடத்தி வந்தனர். இக்கடைக்கு ராதாகிருஷ்ணனின் இரண்டாவது மனைவியான பெண் தாதா எழிலரசியும் பங்குதாரரர் என கூறியதால் பிரச்னை ஏற்பட்டது.அதையடுத்து, கடைக்கு கடந்தாண்டு சீல் வைக்கப்பட்டு, கலால் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் மதுக்கடையில் கதவை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்டதாக திருப்பட்டினம் போலீசில் அஜேஸ்ராம் புகார் கொடுத்தார்.சப் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் வழக்கு பதிந்து விசாரித்தார்.விசாரணையில் நாகை, பனங்குடி சன்னமங்கலம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் அஜித்குமார்,23, சுபாஷ், சிவக்குமார் மற்றும் இரண்டு சிறுவர்கள் சேர்ந்து, மது பாட்டில் திருடியது தெரிய வந்தது. இவர்கள், பூட்டப்பட்ட மதுக்கடையில் பல நாட்களாக மதுபாட்டில் திருடி மது அருந்தி, கும்மாளம் அடித்துள்ளனர். விலை உயர்ந்த மது பாட்டில்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.அஜித்குமார் மற்றும் இரண்டு சிறார்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X