கடலுார்-கடலுார் மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.கடலுார் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்தில், டான்பெட் துணைப் பதிவாளர் சுரேஷ்குப்தா தேசிய கொடியேற்றினார். இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் ராஜன், கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் மஞ்சுளா, வைஜெயந்தி, சந்தியா பங்கேற்றனர்.கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் விஸ்வநாதன், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் சேர்மன் திருமாறன், கடலுார் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் பக்கிரி தேசிய கொடியேற்றினர்.தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் கொடியேற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் பழனிவேலு உடனிருந்தார். கடலுார் தலைமை தபால் அலுவலகத்தில், தலைமை அஞ்சலக தலைவர் சிவபாலன் கொடியேற்றினார். துணை அஞ்சலக தலைவர் மதிவாணன், சி.பி.சி., மேலாளர் சிவசங்கரி மற்றும் கிருஷ்ணகுமார், முருகன், ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அரசுப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம் தேசியக்கொடி ஏற்றினார். ஆசிரியர் சிவகுமாரசாமி, வழுதலம்பட்டு ஊராட்சி தலைவர் கலைச்செல்வி ராஜேந்திரன் பங்கேற்றனர். குள்ளஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஷியாம் கணேஷ் தேசியக் கொடி ஏற்றினார்.விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தேசியக்கொடியேற்றினார். ஆர்.டி.ஓ., ராம்குமார் கொடியேற்றி, தேசிய வாக்காளர் தின போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.கர்னத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி சீனிவாசனின் மனைவி ருக்மணிக்கு, 65, தாசில்தார் தனபதி மாலை, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகராட்சி கமிஷனர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் துாய்மை பணியாளர் கொளஞ்சியம்மாள், அரசு ஆண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் முன்னிலையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தண்டபாணி, வித்யா மந்திர் பள்ளியில் தாளாளர் விசுவநாதன், அரசு மருத்துவமனையில் மருத்துவர் எழில் ஆகியோர் தேசியக் கொடியேற்றினர்.ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முகமது அசேன் தேசியக் கொடியயேற்றினார். சுதந்திரப்போராட்ட தியாகி மாணிக்கத்தின் மனைவி அம்புஜம் சால்வை அணிவித்து புத்தாடை, இனிப்புகள் வழங்கி கவுரவிக்கப்பட்டார். பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் நடராஜன் கொடியேற்றினார்.பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் கருணாநிதி தேசியக் கொடி ஏற்றினார். பி.டி.ஓ., க்கள் சுகுமார், சிவஞானசுந்தரம், துணை சேர்மன் மோகனசுந்தரம் பங்கேற்றனர். பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் செல்லப்பிள்ளை, கிள்ளை பேரூராட்சியில் செயல் அலுவலர் செல்வி கொடியேற்றினர்.புவனகிரி: கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,க்கள் ராமச்சந்திரன், சீனுவாசன் முன்னிலையில், சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் தேசிக்கொடி ஏற்றினார். மேல்புவனகிரி ஒன்றிய அலுவலகத்தில் துணை சேர்மன் வாசுதேவன், பி.டி.ஓ., ராஜசேகர் முன்னிலையில், சேர்மன் சிவப்பிரகாசம் தேசியக்கொடி ஏற்றினார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அன்பழகன் கொடி ஏற்றி னார்.பண்ருட்டி: பண்ருட்டி ஒன்றிய அலுவலகத்தில் துணை சேர்மன் தேவகி ஆடலரசு, பி.டி.ஒ., க்கள் குமரன், ராதிகா, துணை பி.டி.ஓ., க்கள் பாண்டியன், ராஜா முன்னிலையில், ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் தேசிய கொடி ஏற்றினார். அண்ணாகிராமம் ஒன்றியத்தில் பி.டி.ஓ.,க்கள் சித்ரா, விஜயா, துணை பி.டி.ஓ., சுடர்வேல்மூர்த்தி, திருநாவக்கரசு முன்னிலையில் சேர்மன் ஜானகிராமன் தேசியக் கொடி ஏற்றினார். பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் ரவி, தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கார்த்திகேயன், டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., சபியுல்லா தேசியக் கொடி ஏற்றினர்.சிறுபாக்கம்: துணைச் சேர்மன் கலைச்செல்வி, பி.டி.ஓ.,க்கள் சண்முக சிகாமணி, தண்டபாணி முன்னிலையில், மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் சுகுணா சங்கர், தேசிய கொடியேற்றினார்.வேப்பூர்: நல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் துணை சேர்மன் ஜான்சிமேரி தங்கராசன், பி.டி.ஓ.,க்கள் சங்கர், பாலக்கிருஷ்ணன் முன்னிலையில் சேர்மன் செல்வி ஆடியபாதம் தேசியக் கொடியேற்றினார்.சேத்தியாத்தோப்பு: டி.எஸ்.பி., அலுவலகத்தில் தலைமை எழுத்தர் சீனிவாசன், ஏட்டுக்கள் ராஜாராமன், சதீஷ், பாரி, ஆனந்த் முன்னிலையில் டி.எஸ்.பி., சுந்தரம் தேசியக்கொடியேற்றினார்.பெண்ணாடம்: பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் குமார், பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பாஸ்கரன், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் வி.ஏ.ஓ., சம்பத் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிளை நுாலகத்தில் நுாலகர் வீராசாமி, பெலாந்துறை அணைக்கட்டு அலுவலகத்தில் உதவி பொறியாளர் பாஸ்கர் தேசியக் கொடியேற்றினர்.சிதம்பரம்: சிதம்பரம் எம்.எல்.ஏ., அலுவலத்தில் பாண்டியன் எம்.எல்.ஏ., தேசியக்கொடி ஏற்றினார்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் கதிரேசன் தேசியக் கொடி ஏற்றினார். பதிவாளர் சீதாராமன், கர்னல் விஜயகுமார், கேப்டன் கனகராஜன், சீமான், ரவிச்சந்திரன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், தொலைதூர கல்வி இயக்குனர் சிங்காரவேலன் பங்கேற்றனர்.நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் பார்த்தசாரதி தேசியக் கொடியேற்றினார். மேலாளர் அண்ணாதுரை, துப்புரவு அலுவலர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.வடலுார்: குறிஞ்சிப்பாடி ஒன்றிய அலுவலகத்தில் துணை சேர்மன் குணசுந்தரி சுப்ரமணியன், பி.டி.ஓ., சுப்பிரமணியன் முன்னிலையில், சேர்மன் கலையரசி கோவிந்தராஜ் தேசியக் கொடி ஏற்றினார்.போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா முன்னிலையில், இன்ஸ்பெக்டர் செல்வம் கொடியேற்றினார். பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் முருகவேல், துப்புரவு ஆய்வாளர் குருசங்கர் முன்னிலையில் செயல் அலுவலர் கிருஷ்ணன் கொடி ஏற்றினார்.தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சையத் அபுதாகிர், வடலுார் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் குணாளன், போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் வீரமணி கொடியேற்றினர்.