கடலுார்-கடலுார் கஸ்டம்ஸ் அலுவலகத்தில், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், காஞ்சிபுரம், திருவள்ளுர் மற்றும் புதுச்சேரி எல்லைகள் அடங்கிய கஸ்டம்ஸ் கோட்ட அலுவலகம் கடலுார் முதுநகரில் இயங்கி வருகிறது.இங்கு, குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. உதவி ஆணையர் வெங்கடேஷ்பாபு கொடியேற்றினார். கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், சுங்க கடல்பிரிவு குழவினர் பங்கேற்றனர். உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபுக்கு சிறந்த பணிக்கான ஜனாதிபதி விருது இந்தாண்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.